• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மாத சம்பளத்தில் ரூ. 3000 சேமித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

மாத சம்பளத்தில் ரூ. 3000 சேமித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

மாத சம்பளத்தில் சிறிய தொகையை நிறுத்தில் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த இரண்டு முதலீடு திட்டங்களை தேர்ந்தெடுத்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

  • Share this:
    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் கிராம சுமங்கல் யோஜனா திட்டத்தில் மாதம் ரூ. 3000 சேமித்தால் ரூ. 14 லட்சம் லாபம் பார்க்க முடியும். இந்த திட்டத்தில் 2 வகைகள் உள்ளன. 15 ஆண்டு கால திட்டம் மற்றும் 20 ஆண்டு கால திட்டம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம் இந்த திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்சம் 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த திட்டத்தில், 15 ஆண்டு கால சேவிங்ஸில் 6, 9 மற்றும் 12 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-20% பணம் திரும்பக் கிடைக்கும்.

    இதில் மீதமுள்ள 40% பணம் போனஸ் உடன் மொத்தமாக திட்டம் முடிவடைந்த பின்பு கொடுக்கப்படும். அதேபோல, 20 ஆண்டு கால சேவிங்ஸில் 8, 12 மற்றும் 16 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் 20-20 சதவிகிதம் பணம் கிடைக்கும். மீதமுள்ள 40% பணம் முதிர்வு காலத்தில் போனஸுடன் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் 15 ஆண்டு கால சேவிங்ஸில் சேர அதிகப்பட்ச வயது 45. 20 ஆண்டு கால சேவிங்ஸை தேர்ந்தெடுத்தால் அதிகப்பட்ச வயது 40. இதில் காலாண்டு பிரீமியம் ரூ .8,449 ஆகவும், அரையாண்டு பிரீமியம் ரூ .16,715 ஆகவும், ஆண்டு பிரீமியம் ரூ .32,735 ஆகும்.இந்த திட்டம் 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ .13.72 லட்சம் தொகையை வழங்குகிறது.

    இதில், 4.2 லட்சம் விதிமுறைகளின் படி முன்பே வழங்கப்பட்டுவிடும் மற்றும் முதிர்வு காலத்தில் ரூ. 9.52 லட்சம் ஒன்றாக வழங்கப்படும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் ரூ. 95 சேமித்தால், (மாதத்திற்கு ரூ. 2850, மாதத்திற்கு 31 நாட்கள் என்றால் ரூ. 2945) என முதலீடு செய்தால் போதும் 20 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் ரூ. 14 லட்சம் இருக்கும்.

    இதே போல் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் தொடர் வைப்பு நிதி திட்டம் இந்த திட்டத்தில் சேமிப்பது எண்ணற்ற லாபத்தை தரகூடியது. அதிலும் குறிப்பாக மாத சம்பளம் வாங்குபவர்கள் இதில் முதலீட்டைத் தேர்ந்தெடுப்பது வருங்காலத்தில் கைக்கொடுக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக எவ்வலவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். உங்கள் விருப்பம் தான்.

    இதில் முதலீடு செய்ய வேண்டும் என முடிவு எடுத்த உடன் நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போஸ்ட் ஆஃபீஸ் சென்றால் போதும்.இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் உள்ளன. முடிந்தவுடன் அதை நீடித்துக் கொள்ளலாம்.

    வட்டி விகிதம் , வங்கிகளை விட அதிகம் 5.8% வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் உண்டு. அதாவது 12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். 12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% இடையில் பணம் எடுக்க முடியும்.

    சேவிங்க்ஸ் அக்கவுண்டுக்கு இனி பழைய வட்டி கிடையாது.. அதிர்ச்சி தந்த பிரபல வங்கி!

    ஒரு நல்ல முதலீடை தேர்ந்தெடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த இரண்டு முதலீடு திட்டங்களை தேர்ந்தெடுத்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: