பணத்திற்கு முழு பாதுகாப்பு, வருவாய் உயரும், லாபம் உறுதி. அஞ்சல் சேமிப்பில் இருக்கும் இந்த சூப்பரனா திட்டங்களில் முதலீடு செய்ய நீங்கள் தயாரா?
PPF அல்லது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் நீண்ட கால அடிப்படையில் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு நன்மையையும் வழங்குகிறது. பிபிஎஃப் முதலீடு மத்திய அரசால் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதால் இது முற்றிலும் ஆபத்து இல்லாதது. PPF என்பது சுயதொழில் செய்வோருக்கும் EPFOவில் இணையாத ஊழியர்களுக்கும் மிகவும் பொருத்தமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்.
இது 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீட்டாளர்கள் ஓரளவு தொகையை திரும்பப் பெறலாம், இருப்பினும் அவர்கள் 15 வருட காலத்திற்குள் கணக்கை நீட்டிக்க முடியும். கணக்கை ஆக்ட்டிவாக வைத்திருக்க, தகுதியான முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 வைப்பு தொகை அவசியம். அடுத்தது ரெகரிங் டெபாசிட் திட்டம். இதில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். ஐந்து ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பிறகு, தேவைப்பட்டால் டெபாசிட் கணக்கை நீட்டித்துக்கொள்ளலாம். அதிகபட்ச வரம்பில்லாமல் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ .100 நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
அஞ்சல் சேமிப்பில் இருக்கும் ஃபிக்சட் டெபாசிட் அல்லது நிலையான வைப்பு நிதித் திட்டம் பெரும்பாலான மூத்த குடிமக்களுக்கான முதல் தேர்வாக இருந்து வருகிறது. நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் உங்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திர அளவில் நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. காலாண்டு அடிப்படையில் வழக்கமான வட்டி வருமானத்தை ஈட்ட, குறைந்தபட்ச வயது வரம்பு 60 கொண்ட முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ரூ .15 லட்சம் வரை
டெபாசிட் செய்யலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் வீட்டில், இரண்டு மகள்கள் இருந்தால் அவர்களுக்கு தனித்தனியாக 2 கணக்குகளின் வரம்பு அனுமதிக்கப்படுகிறது 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில், ஒரு பாதுகாவலர் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ .250 வரை ரூ .1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டம் முற்றிலும் பெண் குழந்தைகளுக்கானது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.