முகப்பு /செய்தி /வணிகம் / ரிடையர்மெண்ட் பணம் கையில் இருக்கா? இந்த திட்டத்தில் போட்டால் கண்டிப்பா லாபம் தான்!

ரிடையர்மெண்ட் பணம் கையில் இருக்கா? இந்த திட்டத்தில் போட்டால் கண்டிப்பா லாபம் தான்!

பென்சன் திட்டங்கள்

பென்சன் திட்டங்கள்

நல்ல வட்டி தரக்கூடிய திட்டங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்

  • Last Updated :

மூத்த குடிமக்களுக்காவே செயல்பாட்டில் இருக்கும் நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

சேமிப்பு என்பது வாழ்நாளில் கண்டிப்பாக உதவக்கூடிய ஒன்று. ஓடி ஆடி சம்பாதிக்கும் போதே ஒரு நல்ல சேமிப்பு அல்லது முதலீடு திட்டத்தில் பணத்தை போட்டு வைத்தால் போதும் 60 வயதை அடைந்ததும் எவ்வித பிரச்சனை இன்றி யார் துணையும் இன்றி வீட்டில் இருந்தப்படியே உட்கார்ந்து சாப்பிடலாம். அதனால் தான் இளமை சேமிப்பு முதுமையில் மகிழ்ச்சி என்பார்கள். 20 முதல் 30 வயதில் நீங்கள் சேமிப்பு பழக்கத்தை தொடங்கிவிடுங்கள். அல்லது எதாவது முதலீடு திட்டத்தை தேர்ந்தெடுத்து அதிலும் சேமித்து வாருங்கள். நல்ல வட்டி தரக்கூடிய திட்டங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அதே போல் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்.

இளமையில் தவறவிட்ட வாய்ப்பை முதுமையிலும் அடையலாம். ஒருவேளை நீங்கள் சம்பாதிக்கும் போது எந்தவித சேமிப்பு அல்லது முதலீடு திட்டத்தையும் தேர்ந்தெடுக்க வில்லையா? கவலை வேண்டாம்? இப்போது கூட அதற்கு கூட வாய்ப்பு உள்ளது. உங்கள் ரிடையர்மெண்ட் பணம் கையில் இருக்கா? அப்ப இந்த திட்டங்களை கொஞ்சம் பாருங்கள்.  கண்டிப்பாக உங்களுக்கு லாபம் தரக்கூடியவை. முதலில்  பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருடைய வயது 60க்கு குறைவாகவும் 55 வயதிற்கு அதிகமாகவும் இருந்தாலும் அவரால் இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க இயலும். கண்டிப்பாக அவர் விருப்ப ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டங்களில் செய்யப்படும் மொத்த முதலீடு ரூ .15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவிகித வட்டி வழங்கப்படுகின்றது.கணக்குத் திறந்த தேதியிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்தபின், எழுத்து மூலமான விண்ணப்பத்துடன் சேர்த்து, கணக்குப் புத்தகம், படிவம் ஈ ஆகியவற்றைச் சமர்ப்பித்து உங்கள் முதிர்வு தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். நல்ல வட்டி லாபத்துடன் உங்களுக்கு முதிர்வு தொகை கிடைக்கும். அடுத்தது, தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்களுக்கான வைப்புத் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மற்றும் 60 வயதிற்கும் குறைவான வயதுக்குட்பட்ட தனிநபர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் இந்தக் கணக்கை தொடங்க வேண்டும். இந்தச் சேமிப்புக் கணக்கிற்குச் சுமார் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. ஒருவேளை ஒரு ஆண்டிற்கு முன்னர் வைப்புத் தொகையைத் திரும்ப எடுக்க வேண்டுமெனில், மொத்த வைப்புத் தொகையின் மதிப்பில் சுமார் 1.5 சதவீதம் அபராதமாகச் செலுத்த வேண்டும். சேமிப்பு பணத்திற்கு உச்ச வரம்பு ஏதும் இல்லை.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Savings