Home /News /business /

கை நிறைய லாபம் தரும் FD, RD, PPF திட்டங்கள் பற்றி முக்கியமா தெரிஞ்சுக்கோங்க!

கை நிறைய லாபம் தரும் FD, RD, PPF திட்டங்கள் பற்றி முக்கியமா தெரிஞ்சுக்கோங்க!

சேமிப்பு

சேமிப்பு

முதலீட்டாளர்கள் துரதிஷ்டவசமாக மரணம் அடைந்தாலும் பிபிஎப் முதலீடுகள் நிறுத்தப்படும் மற்றும் இறக்கும் வரை டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில வருமானம் கணக்கிடப்படும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நிலையான வைப்பு நிதி (FD), தொடர் வைப்பு நிதி( RD) மற்றும் பிபிஎப் (PPF) போன்ற வருவாய் திட்டங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கிறது. இருந்தப்போதும் சிலவற்றில் வட்டி விகிதங்கள் அதிகளவில் இருக்கக்கூடும்.

    கொரோனா தொற்றிற்குப் பிறகு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது. அந்தளவிற்கு கொரோனா தொற்று காலத்தில் மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு பொருளாதார பிரச்சனைகளைச் சந்தித்தனர். நாம் முதலீடு செய்யும் திட்டங்கள் எந்தளவிற்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக  இருக்கும்? வட்டி விகிதம் எதில் அதிகம் உள்ளது? என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்த பின்னர் தான் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறோம். இதில் நிலையான வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி மற்றும் பிபிஎஃப் போன்றவற்றில் தான் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதில் உள்ள நன்மைகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

    ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய விதிகள் .. ரிசர்வ் வங்கியின் புதிய கைடுலைன்ஸ்!

    நிலையான வைப்பு நிதி (Fixed deposit-FD):

    நிலையான வைப்பு நிதியில் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை மொத்தமாக செலுத்துவதோடு அப்பணத்திற்கான வட்டியைப் பெறுகின்றனர். இதனால் முதலீடு செய்பவர்களுக்கு மரணம் ஏற்பட்டாலும் எவ்வகையிலும் முதலீட்டை பாதிக்காது. அதே சமயம் FD வட்டிகளுக்கு வரி விதிக்கப்படும் என்பவதோடு முன்கூட்டியே நம்முடைய பணத்தைத் திரும்பப் பெறப்பட்டால் நாமினிகள் குறைந்த வருமானத்தைப் பெறுவார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இருந்தப்போதும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அல்லது நிலையான வருவாய் திட்டத்தில் நாமினி எந்த வரிப் பிடித்தமும்  இல்லாமல் முழு தொகையைப் பெறுவார்கள்.

    தொடர் வைப்பு நிதி ( Recurring deposit – RD):

    தொடர் வைப்பு நிதியில் குறிப்பிட்ட கால பிரீமியம் தொகையுடன் பணம் செலுத்தும் போது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. நிலையான வைப்பு நிதியைப் போல இருந்தாலும் ஆர்டியில் சில மாற்றங்கள் உள்ளது. குறிப்பாக தொடர் வைப்பு நிதி வைத்திருக்கும் முதலீட்டாளர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட நேரிட்டால், அவர்களின் முதலீடுகள் நிறுத்தப்பட்டு குறைவான வட்டி விகிதத்தில் தான் பணத்தைப் பெற முடியும்.

    போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்வதற்கு முன் இதைப்பற்றி முதலில் தெரிஞ்சுக்கோங்க!

    பொது வருங்கால வைப்பு நிதி – PPF

    பொது வருங்கால வைப்பு நிதியில்  வழங்கப்படும் வட்டி விகிதங்கள் பொதுவாக நடைமுறையில் உள்ள FD, RD விகிதங்களை விட அதிகமாக இருக்கும். மேலும், முதலீட்டாளர்கள் முதலீடுகள் மற்றும் வட்டி மற்றும் முதிர்வு மதிப்பு ஆகியவற்றின் மீது வரிச் சலுகைகளைப் பெறுகின்றனர். அதே சமயம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அல்லது நிலையான ரிட்டர்ன் திட்டங்களும் PPF போன்ற EEE வரி நிலையை அனுபவிக்கின்றன. மேலும் சில திட்டங்களில் வழங்கப்படும் விகிதங்கள் FDகள் மற்றும் RDகளை விட அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    மேலும்  முதலீட்டாளர்கள் துரதிஷ்டவசமாக மரணம் அடைந்தாலும் பிபிஎப் முதலீடுகள் நிறுத்தப்படும் மற்றும் இறக்கும் வரை டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில வருமானம் கணக்கிடப்படும்

    இதுப் போன்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட அல்லது நிலையான வருவாய்த் திட்டங்கள் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், முதலீட்டாளர்களுக்கு அதிக வருமான விகிதங்களையும் அளிக்கின்றன. உதாரணமாக மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் 7 சதவீதத்திற்கும் அதிகமான IRR உடன் சில நிலையான வருமானத் திட்டங்களை வழங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Fixed Deposit, PPF, Savings

    அடுத்த செய்தி