• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • லாபம் உறுதி...உங்கள் வாழ்வை மாற்ற போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் இந்த திட்டங்களை பற்றி யோசியுங்கள்!

லாபம் உறுதி...உங்கள் வாழ்வை மாற்ற போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் இந்த திட்டங்களை பற்றி யோசியுங்கள்!

போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட்

போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட்

முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்

  • Share this:
    இதுவரை எந்த சேமிப்பு திட்டத்தையும் தொடங்கவில்லை, எதிலும் முதலீடு செய்யவில்லை என்று கூறுபவர்கள் போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் இந்த திட்டங்களை கொஞ்சம் பாருங்கள்.

    சேமிப்பு என்பது கட்டாயம் ஒவ்வொரும் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். எதிர்காலத்தில் உங்களின் வாழ்வாதாரத்தை இந்த சேமிப்பு தான் தீர்மானிக்கிறது, வெறும் சேமிப்பு கணக்கு மட்டுமில்லை நல்ல வருவாய் தரும் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வதும் ஒரு நல்ல முடிவு தான். அதற்கு முன்பு என்னென்ன வகையான திட்டங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக இன்று போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் திட்டங்கள் குறித்து முதலில் பார்க்கலாம்.

    கிசான் விகாஸ் பத்ரா திட்டமானது மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். நீண்ட கால அடிப்படையில் இது நல்ல வருவாய் தரும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இந்த கிசான் விகாஸ் பத்திரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும்.நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும். இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.

    அடுத்தது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். இந்த திட்டத்தில் 5 வருட தேசிய சேமிப்பு சான்றிதழ் உங்களுக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை வழங்கும், ஆனால் இது முதிர்ச்சியில் தான் செலுத்தப்படும்.இதன் மெச்சூரிட்டி காலம் ஐந்து ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டி முடிவில் பணம் செலுத்தப்படும். குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. 10 வயதுக்கு மேலான மைனர் பெயரில் தனியாகவோ, பெற்றோருடன் கூட்டாகவோ முதலீடு செய்யலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தபால் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் குறைந்தது மாதம் 10 ரூபாய் முதல் முதலீடு செய்துவரலாம். மாதம் 10 ரூபாய் விதம் ஐந்து வருடம் வரை முதலீடு செய்துவரும் 600 ரூபாய்க்கு முதிர்ச்சித் தொகையாக 726.97 ரூபாய் பெறலாம். தபால் அலுவலக நேர வைப்பு கணக்கில் குறைந்தது 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி காலாண்டு வாரியாக கணக்கிடப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: