• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு போறீங்களா? அப்ப இந்த திட்டம் உங்களுக்கு கைக்கொடுக்கும்!

கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு போறீங்களா? அப்ப இந்த திட்டம் உங்களுக்கு கைக்கொடுக்கும்!

சிறந்த சேமிப்பு

சிறந்த சேமிப்பு

5 வருடம் கழித்து இருவரும் சேமித்த பணம் கட்டாயம் பிள்ளைகளின் படிப்பு அல்லது உங்களுக்கே பிற செலவுக்கு உதவும்.

  • Share this:
    வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களுடன் சேர்த்து உங்கள் பிள்ளைகளின் வருங்காலமும் நல்லா இருக்கும்.

    சேமிப்பு கணக்கை காட்டிலும் சில குறிப்பிட்ட முதலீடு திட்டங்களில் அதிக வருவாயைப் பார்க்கலாம். அப்படியொரு மிகச் சிறந்த முதலீடு திட்டம் தான் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மாதாந்திர வருவாய் திட்டம். நீங்கள் லட்சாதிபதி ஆவதும் கோடிஸ்வரராக உயர நினைப்பதும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மிகச் சிறந்த முதலீடு திட்டத்தில் தான் உள்ளது.இளம் வயதிலே சற்றும் கவனத்துடன் இதை ஆரம்பித்தால் ஓய்வு காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம். பணத்திற்கு பாதுகாப்பு. இதை எல்லாம் தாண்டி வட்டியும் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் அஞ்சல் சேமிப்பில் இருக்கும், நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் இந்த மாதாந்திர வருவாய் திட்டம் முக்கியமானது.

    போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். பணத்தை சேமிக்க வேண்டும், நல்ல முதலீடு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு மாதாந்திர வருவாய் திட்டம் ஒரு நல்ல தேர்வாகும்.முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு திட்டமாகவும் இது உள்ளது. இப்போது வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வதாக வைத்து கொள்வோம். இந்த திட்டத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து முதலீடு செய்தால் நல்ல லாபம். அதுமட்டுமில்லை 5 வருடம் கழித்து இருவரும் சேமித்த பணம் கட்டாயம் பிள்ளைகளின் படிப்பு அல்லது உங்களுக்கே பிற செலவுக்கு உதவும் எனவே யோசித்து செயல்படுங்கள்.

    இந்த மாதாந்திர வருவாய் திட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் இணைந்து கணக்கு தொடங்கி அதில் ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால் மாத வருவாயாக ரூ. 4,950 வழங்கப்படுகிறது. அந்த தொகையே அப்படியே நீங்கள் சேர்த்து வைக்கலாம். இந்த முதலீட்டுக்கு வழங்கப்படும் வட்டி 6.6% ஆகும். இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாகும்.இந்த முதலீட்டின் மெச்சூரிட்டி முடியும் போது உங்களின் முதலீடு அப்படியே உங்களின் கைகளில் கிடைக்கும். நீங்கள் போட்ட பணத்திற்கு மாதம் மாதம் வட்டியும் கிடைத்துவிடும். மாதம் ரூ. 4,950 என்றால் வருஷத்திற்கு இந்த 9 லட்சம் முதலீட்டால் உங்களுக்கு கிடைக்கும் பணம் ரூ. 59, 400. கணவன் - மனைவி அல்லாமல் தனிநபரும் இந்த கணக்கு துவங்கி சேமிக்கலாம். ஆனால் தனிநபர் முதலீடு என்றால் ரூ. 4.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: