மிக சிறந்த முதலீடான பிபிஎஃப் திட்டம் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
பிபிஎஃப் திட்டத்தில் தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்குப்படி நீங்கள் 30 வயதில் முதலீடு தொடங்க திட்டமிடுகிறீர்கள் என்றால் 60 வயதிற்கு பிறகு உங்கள் கையில் வட்டியுடன் நீங்கள் சேமித்த தொகை இருக்கும். சரியாக 30 வருடங்கள் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு கிடைக்க போகும் தொகை ரூ. 37,08,219. கண்டிப்பாக இந்த தொகை உங்கள் முதுமையை இனிமையாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும் மிகச் சிறந்த முதலீடு திட்டம் தான் பிபிஎஃப். குறிப்பாக இந்த திட்டத்தை பொருத்தவரையில் 15 ஆண்டுகள் முதிர்வுகாலம் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை 15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் 5 ஆண்டுகள் வேண்டுமென்றால் கூட நீடித்துக் கொள்ள முடியும். அதிக நன்மை தரக்கூடிய இந்த பிபிஎஃப் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது, பென்சன் பெறுவது என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.அதாவது நீங்கள் 30 வயதில் மாதம் 3000 முதலீடு செய்தால், வருடத்திற்கு அதுவே ரூ. 36,000 ஆகிறது. அப்படி இருக்கையில் பிபிஎஃப் திட்டத்தில் 7.1% வட்டி அளிக்கப்படுகிறது. அதுவும் 30 ஆண்டுகள் இந்த சேமிப்பை தொடர்ந்தால் 30 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்யும் தொகை ரூ. 10.80 லட்சம். ஆனால் வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையாக உங்கள் கைக்கு ரூ. 37,08,219 தரப்படும். இது தான் பிபிஎஃப் திட்டத்தின் முதலீடு குறித்த முழு விபரம்.
கண்டிப்பாக இளைமையில் முதலீட்டை தொடங்க வேண்டிய திட்டம் பிபிஎஃப்.ஏதாவது ஒரு முதலீடு திட்டத்தை 30 வயதுக்குள் தொடங்க வேண்டும். அப்படி சரியான திட்டத்தை தேர்வு செய்து தொடங்கினால் போதும் முதுமை இனிமையாகி விடும். அந்த வகையில் பிபிஎஃப் திட்டம் மிடில் கிளாஸ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த திட்டம் அஞ்சலகம் மற்றும் சில பொது மற்றும் தனியார் வங்கிகளிலும் செயல்பாட்டில் உள்ளது. உங்கள் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் முதலீட்டை தொடங்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.