ஹோம் /நியூஸ் /வணிகம் /

கடைசி வரை எந்த பிரச்சனையும் வராத முதலீடு திட்டம்! எப்படி தொடங்குவது? முழு விவரம்

கடைசி வரை எந்த பிரச்சனையும் வராத முதலீடு திட்டம்! எப்படி தொடங்குவது? முழு விவரம்

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

பணத்தை இடையிலேயே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு சூப்பரான சேமிப்பு திட்டம் பற்றி தான் பார்க்க போகிறோம்.

பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகி விடும். வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால், சேமிக்கலாம் என்று திட்டமிட்டும் போது தான் அந்த செலவு, இந்த செலவு என வரிசைக்கட்டி நிற்கும். இப்படி எண்ணி எண்ணி எத்தனை நாளுக்கு தான் சேமிப்பு என்பதையே தொடங்கலாம் இருக்க போகிறீர்கள்? எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் வங்கிகள், அஞ்சலகத்திலும் உள்ளது. நல்லா யோசிங்க. ஒரு சூப்பரான முதலீடு திட்டம் இங்கே படியுங்கள். பிறகு உங்கள் முடிவை எடுங்கள்.

உங்கள் சேமிப்பின் அங்கமாக இருந்து வருவாயை பெருக்கும் திட்டமாக இது இருக்கும் அதே போல் கடைசி வரை உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கும். இந்த திட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கிறீர்களா? இதோ விவரம்.தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் தேசிய சேமிப்பு சான்றிதழ். சிறு வருமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கான ஃபிக்ஸ்ட் மெச்சூரிட்டி காலத்துடன் இந்த சேமிப்பு திட்டம் 6.8% வட்டி வழங்கக் கூடியது. இந்த சேமிப்பு கணக்கில் முதலீட்டின் உச்சவரம்பு இல்லை.தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த கணக்கை துவங்கலாம். வங்கி சேவைகளில் நிலையான வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் இதில் வட்டி அதிகம். 1961 இன் பிரிவு 80 சி-ன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.

இந்த திட்டத்தை நீங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையத்தில், அவர்கள் கேட்கும் ஆவணங்களை சமர்பித்து கணக்கு துவங்கலாம். மேலும் உங்களின் இந்த சேமிப்பு திட்டத்தில் உள்ள பணத்தை ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு எளிமையாக மாற்றவும் முடியும். இந்த திட்டத்தில் நீதிமன்ற உத்தரவு இருந்தால் பணத்தை இடையிலேயே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Money