ஹோம் /நியூஸ் /வணிகம் /

கையில் பணம் தங்க மாட்டேன் என்கிறதா.? - சேமிப்புக்கு என்ன வழி.!

கையில் பணம் தங்க மாட்டேன் என்கிறதா.? - சேமிப்புக்கு என்ன வழி.!

சேவிங்ஸ்

சேவிங்ஸ்

Money Saving Tips | சிறுக, சிறுக சேமித்தாலும் கூட, ஒரு நாள் நமக்கு அவசரத் தேவை ஏற்படும்போது, அந்த சேமிப்புத் தொகை மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய தேதியில் நாம் கை நிறைய சம்பாதித்தாலும், கொஞ்சம் பணம் சேமிப்பது என்பது கடினமான காரியமாக மாறி வருகிறது. ஆடம்பரம், சொகுசு வசதிகள் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, சாமானியருக்கான வாழ்க்கையை வாழ்ந்தாலும் கூட, அத்தியாவசிய தேவைகளுக்கு செலவழித்தது போக பணம் மிச்சம் ஆகுவதில்லை. சில சமயம் கூடுதலாகவும் செலவாகி விடுகிறது.

ஆனால், சிறுக, சிறுக சேமித்தாலும் கூட, ஒரு நாள் நமக்கு அவசரத் தேவை ஏற்படும்போது, அந்த சேமிப்புத் தொகை மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும். குறிப்பாக, நம்மை நம்பி கடன் கொடுக்க யோசிக்கும் அளவுக்கு, சமுதாயத்தில் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கும் சூழலில், நம் கைதான் நமக்கு உதவியாக அமையும்.

ஆடோமேடட் சேவிங்ஸ்

நம்முடைய மாத சம்பளம் அல்லது வருமானம் வந்ததும், வங்கிக் கணக்கில் இருந்து சில பேமெண்டுகளுக்கு ஆட்டோடெபிட் பயன்படுத்துவோம் அல்லவா! அதுபோல, நமது சேமிப்புக்கும் பணம் ஆடோமேடட் வகையில் சென்றுசேர வேண்டும். ஊதியம் பெறும் வங்கிக் கணக்கில் இருந்து சேமிப்புக் கணக்கிற்கு சிறு தொகை சென்று சேரும்படி ஏற்பாடு செய்யலாம்.

ஒருவேளையில் நமக்கு அது சௌகரியமாக இல்லை என்றால், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நம் நிறுவனத்தின் மூலமாகவே தனி சேமிப்புக் கணக்கில் செலுத்த பணப்பிடித்தம் செய்ய கோரிக்கை வைக்கலாம்.

உங்களுக்கு முதலில் பணம் செலுத்துங்கள்

சம்பளம் வந்ததும் கரெண்ட் பில், மளிகை பில், வீட்டு வாடகை என எல்லா தேவைகளுக்கும் பணம் ஒதுக்குவதைப் போல உங்கள் சேமிப்புக்கான பணத்தை ஒதுக்கி வைக்க பழகவும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை நமது சேமிப்புக் கணக்கில் செலுத்தி வரலாம்.

Also Read : கேஷ்பேக் கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா.? மறக்காமல் இதை மட்டும் ஃபாலே பண்ணிடுங்க.!

டேக்ஸ் ரிஃபண்ட் சேமிப்பு

வருமான வரி உச்சவரம்பிற்கு கீழே இருப்பவர்களிடம் இருந்து பிடிக்கப்படும் டிடிஎஸ் வரி உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் திரும்பப் பெறும்போது, அதை அவர்கள் சேமிப்பாக கருதுவதில்லை. மாறாக பெரும் செலவை அதன் மூலமாக செய்கின்றனர். ஆனால், இதை தனியாக டெபாசிட் செய்து வைக்கும் பட்சத்தில் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

துணை வருமானம்

சைடு பிசினஸ் என்று சொல்லக் கூடிய துணை வருமான வழி ஒன்றை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அது ஒரு பிளாக் ஆரம்பிப்பதாக இருக்கலாம் அல்லது யூ டியூப் சேனலாக இருக்கலாம். உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரம், உங்களுடைய முதலீட்டு வரம்பு, உங்களிடம் இருக்கும் தனித்திறன் ஆகியவற்றை பொருத்து என்ன தொழில் செய்வது, எவ்வளவு நேரம் செய்வது என்பதை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Also Read : சரியான டைம்.. பணம் கொட்டும்! உங்களுக்கான முகூர்த்த டிரேடிங் வந்தாச்சு - இதோ முழு விபரம்.!

தேவையற்ற சப்ஸ்கிரிப்ஷன்களை ரத்து செய்யவும்

இன்றைக்கு ப்ரீமியம் சேவைகள் பெருகிவிட்டன. நாமும் கூட ஏதேதோ ஆசையில் சில இணையதளங்கள், ஆப் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு அல்லது ஆன்லைனில் வீடியோ கண்டெண்ட் பார்க்க என நிறைய சப்ஸ்கிரிப்ஷன்களை செய்து வைத்திருப்போம். இவற்றில் அதிக பயன்பாட்டில் இல்லாதவற்றை ரத்து செய்யவும்.

ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளவும்

ஒரு பொருளை அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை கைவிடுங்கள். நீங்கள் விரும்பும் தரமான பொருள் எப்போது ஆஃபரில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கணித்து வாங்கவும். குறிப்பாக கூப்பன், புரோமோ கோட் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளவும்.

Also Read : குழந்தைகளுக்கு பாலிசி எடுக்க திட்டமா! எல்ஐசியின் அருமையான திட்டம்

தேவையற்றதை விற்கவும்

ஏதோ ஒரு ஆசையில் சில பொருட்களை நாம் வாங்கி குவித்து வைத்திருப்போம். உதாரணத்திற்கு 2, 3 பைக்குகளை வைத்திருப்போர் உண்டு. அதேபோல, வீட்டில் சில பொருள் பயன்படுத்தப்படாமலேயே இருக்கும். அதுபோன்றவற்றை ஆன்லைன் தளங்கள் மூலமாக விற்பனை செய்து, அந்த பணத்தை சேமித்து வைக்கவும்.

Published by:Selvi M
First published:

Tags: Money, Savings, Tamil News