• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 25 வயதில் இந்த சேமிப்பை தொடங்கினால் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

25 வயதில் இந்த சேமிப்பை தொடங்கினால் நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

சேமிப்பு

சேமிப்பு

5 வருடங்கள் கழித்து 30 வயதில் செய்தால் உங்களுக்கு 40 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு ஓய்வு பெறும் வயதில் ரூ.59.2 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

  • Share this:
    உங்கள் வாழ்வை மாற்றும் ஓர் அட்சய பாத்திரம் என்றால் அது எஸ்.ஐ.பி முதலீடு தான். முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் லட்சாதிபதி ஆவதும் கோடிஸ்வரராக உயர நினைப்பதும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மிகச் சிறந்த முதலீடு திட்டத்தில் தான் உள்ளது.இளம் வயதிலே சற்றும் கவனத்துடன் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். ஓய்வு காலத்தில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம். அதுவும் ரூ. 50 முதலே முதலீடு திட்டங்களில் நல்ல ஓய்வுதியம் பெறலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பரஸ்பர நிதியத்தின் SIP திட்டம் குறித்து கேள்விப்பட்டு இருக்கீங்களா?

    கடந்த சில ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முதலீடுகள் பெறும் கவனத்தை பெற்று வருகின்றன. முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் மற்றும் லாபம் கிடைப்பதால் எஸ்.ஐ.பி திட்டம் மீது அவர்களின் கவனம் அதிகம் செல்கிறது. எஸ்.ஐ.பியில் முதலீடு செய்வதன் மூலம் உங்களின் பணத்திற்கு பாதுகாப்புடன் நல்ல வருவாயும் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை முதலீடு செய்யக்கூடிய வசதியும் உள்ளது. மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கலாம்.

    உங்கள் முதலீடுக்கு ஏற்ப முதிர்வு தொகை மாறுபடும். ஆனால் வட்டி 12 – 15% வழங்கப்படுகிறது.தினமும் நீங்கள் ரூ. 50 சேமித்தால் மாதத்திற்கு 1,500 ரூபாய் உங்களின் முதலீடு ஆகும். இதை 35 வருடத்திற்கு முதலீடு செய்து வந்தால் வட்டி விகிதம் சராசரியாக 12.5% வழங்கப்படுகிறது. அப்படியென்றால் உங்களின் மொத்த முதலீட்டு தொகை ரூ.6.3 லட்சம், ஆனால் மொத்த ஓய்வூதிய மதிப்பு ரூ.1.1 கோடியாக உங்கள் கைக்கு கிடைக்கும். ஆனால் இந்த முதலீட்டை நீங்கள் 25 வயதில் செய்தால் தான் இந்த நிகர மதிப்பு கிடைக்கும். இதுவே, 5 வருடங்கள் கழித்து 30 வயதில் செய்தால் உங்களுக்கு 40 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு ஓய்வு பெறும் வயதில் ரூ.59.2 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

    ஆகவே இளம் வயதில் முதலீடு என்பது எஸ்.ஐ.பியில் மிகவும் முக்கியமான தகுதி. வயது அதிகரிக்கும் போது முதலீட்டு காலம் குறைகிறது அதனால் முதிர்வு தொகையில் மாற்றம் ஏற்படுகிறது. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரக்கூடிய ஸ்கீம் என்றால் அது எஸ். ஐ.பி தான். இதுக்குறித்த கூடுதல் விவரங்களை ஆன்லைனில் படித்து விட்டு தாமதம் செய்யாமல் ஒரு நல்ல சேமிப்பை சீக்கிரமாக தொடங்குங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: