• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அந்த திட்டத்தில் நிறைய லாபம் வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

அந்த திட்டத்தில் நிறைய லாபம் வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான்!

லாபம் தரும் திட்டங்கள்

லாபம் தரும் திட்டங்கள்

வங்கிகளை காட்டிலும் நிதி நிறுவனங்கள் ஃபினாஸ்களில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது.

  • Share this:
    பிக்சட் டெபாசிட் முதலீடு திட்டத்தில் நீங்கள் கைநிறைய லாபம், நல்ல வட்டி வேண்டும் என்று நினைத்தால் அதற்கு செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?

    நல்ல சேமிப்பு சிறந்த வருவாய் பெற பெரும்பாலான மக்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்களை தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி தேர்ந்தெடுக்கும் போது அதற்கு நல்ல வட்டி கிடைக்கிறதா? என பார்ப்பது மிக மிக அவசியம். ஏனெனில் சேமிப்புக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்புகள் என்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல மன நிறைவை தர வேண்டும். அந்த வகையில் பிக்சட் டெபாசிட் திட்டம் எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டங்கள் முதலீட்டுக்கு நல்ல தேர்வு என்றாலும் கூட வட்டியை அவசியம் கவனிக்க வேண்டும்.

    பிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்றவுடன் பலரும் வங்கிகளை நாடி செல்கின்றனர். ஆனால் வங்கிகளை காட்டிலும் நிதி நிறுவனங்கள் ஃபினாஸ்களில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக எஸ்பிஐயில் 7 நாள் முதல் 10 வருடங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.9 முதல் 5.9 வரை வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் அதே நேரம் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கில் 7 நாள் முதல் 10 வருடம் வரை உள்ள டெபாசிட்களுக்கு 3.25 சதவீதம் முதல் 6.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி பெறலாம். ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 2.5 சதவீதம் முதல் 6.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 3 முதல் 6.75% வட்டியை நீங்கள் பெறலாம். எனவே இனிவரும் நாட்களில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்தால் வட்டி மற்றும் பெறக்கூடிய லாபம் குறித்து கவனிக்க மறவாதீர்கள்.

    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்த்து பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்யுங்கள். கண்டிப்பாக லாபம் நிச்சயம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: