புதியதாக 3 பொதுத்துறை வங்கிகள் இணைய வாய்ப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்ட்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் பஞ்சாப் & சிந்த் வங்கி மூன்றும் இணையும் போது 16.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு வங்கி நிறுவனம் உருவாகும்.

news18
Updated: February 7, 2019, 1:54 PM IST
புதியதாக 3 பொதுத்துறை வங்கிகள் இணைய வாய்ப்பு!
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்ட்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் பஞ்சாப் & சிந்த் வங்கி
news18
Updated: February 7, 2019, 1:54 PM IST
மத்திய அரசு விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் தேனா வங்கிகள் இணைவை அடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்ட்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் பஞ்சாப் & சிந்த் வங்கிகளை இணைக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே விஜயா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் தேனா வங்கிகள் இணைய அளித்த அனுமதியை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக இணைய உள்ள வங்கிகளுக்கான அனுமதியை வழங்கலாமா என்ற முடிவை அருண் ஜேட்லி விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்ட்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் பஞ்சாப் & சிந்த் வங்கி மூன்றும் இணையும் போது 16.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு வங்கி நிறுவனமாக இது உருவெடுக்கும்.

அதே நேரம் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளைத் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் பாங்க் ஆஃப் பரோடா இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய வங்கி நிறுவனம் என்ற பெயரை எடுக்கும்.

வாரா கடன் அதிகரிப்பால் பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் தேவையான மூலதனம் இல்லாமல் தவித்து வருகின்றன. இதற்குத் தீர்வு காணவே மத்திய அரசு இப்படி வங்கிகளை இணைக்கிறது. அது மட்டும் இல்லாமல் வங்கிகளுக்கு மறு மூலதன செய்வது குறித்த அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மறுபக்கம் வங்கிகள் இணைவால் ஊழியர்களின் வேலை பறிபோவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: கேபிள், டிடிஎச் புதிய கட்டணம்... மக்களே இனி எஜமானர்!
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...