மாத சம்பளம் பெறும் நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு நிதியாண்டிலும் அவர்களுக்குரிய வரியைத் தவறாமல் செலுத்த வேண்டும். 2021-2022 நிதியாண்டுக்கான சம்பளம் பெறும் நபர்களுக்கு கடந்த ஜூலை 31, 2022 ஆம் தேதிக்குள் வருமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதே போல் கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது அவர்களது கணக்குப்புத்தகங்களைத் தணிக்கை செய்ய வேண்டியவர்கள் கடந்த அக்டோபர் 31, 2022க்குள் தங்கள் வருமான வரித்தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தப்போதும் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த சூழலில் தான், மத்திய அரசு 2021- 2022 நிதியாண்டுக்கான சம்பளம் பெறும் நபர்கள் ஜுலை 31, 2022 தேதிக்குள் வருமான அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 234 F பிரிவின் கீழ் அபராதத்துடன் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாமதமாக வருமான வரித் தாக்கல் செய்வோருக்கு, மொத்த ஆண்டு வருமானம் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ருபாய் 5 ஆயிரம் அபராதமும், மதிப்பீட்டாளர்களின் மொத்த ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
நீங்கள் வருமான வரியைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிடில் அபராதம் மட்டுமில்லாமல் உங்களது சொத்துக்கள், பங்குகள், மூவதனச் சொத்துக்களின் விறபனையில் ஏற்படும் இழப்புகள் போன்ற ஏதேனும் இருந்தால் அவற்றைத் தொடர அனுமதிக்கப்படாது என்ற விதியும் உள்ளது. இதோடு மட்டுமின்றி தாமதமாக வரிக்கணக்கு தாக்கல் செய்தவர்கள் செலுத்தும் வருமான வரிக்கும் வட்டி செலுத்த நேரிடும். எனவே அரசு கொடுத்துள்ள காலக்கெடுவிற்குள் உங்களது வருமான வரியைத் தாக்கல் செய்திட வேண்டும்.
டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய தவறினால் என்ன நடக்கும்?
இதுப்போன்று பல்வேறு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் இன்னமும் பலர் வருமான வரித்தாக்கல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கவலை வேண்டாம். டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகும் நீங்கள் உங்களது வருமான வரித் தாக்கல் செய்துக் கொள்ளலாம். ஆனால் சில கட்டுப்பாடுகள் உள்ளது.
மாத சம்பளம் வாங்கும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கம்பெனிகள் பிடித்தம் செய்யப்படும் TDS பணத்தினை ரீபெண்ட் செய்ய முடியாது.
சட்ட நடவடிக்கை…
வருமான வரி செலுத்துவோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருமானத்தில் மாற்றம் இருக்கும் பட்டத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ்அனுப்பப்படும். பிறகு அவர்களுக்கு தாக்கல் செல்வதற்கு கால அவகாசம் வழங்கப்படும். இது மட்டுமின்றி நீங்கள் ஏன் தாமதமாக வருமான வரியைத் தாக்கல் செய்கிறீர்கள் என்பது குறித்து கடிதமாக எழுதி வருமான வரி ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். காரணம் சரியாக இருக்கும்பட்சத்தில் தான் ஏற்றுக்கொள்வார்கள். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Income tax