• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கும் அரசாக தமிழக அரசு உள்ளது - எம்.சி சம்பத்

தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கும் அரசாக தமிழக அரசு உள்ளது - எம்.சி சம்பத்

அமைச்சர் சம்பத்

அமைச்சர் சம்பத்

  • News18
  • Last Updated :
  • Share this:
தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கும் அரசாக தமிழக அரசு உள்ளது என தேனாம்பேட்டையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கூட்டத்தில் எம்.சி சம்பத் பேசுகையில், “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பிறகு புதியதாக 63 ஒப்பந்தங்கள் ஜப்பான் ஜெர்மனி கொரியா ஆகிய நாடுகளுடன் போடப்பட்டுள்ளன. 2023 தொலைநோக்கு  இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக்குழு அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு ஒற்றைச்சாளர முறையில் தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கி வருகிறது.



தொழில் நிறுவனங்களுக்கு இருக்கும் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கும் அரசாக தமிழக அரசு உள்ளது.
உலகளவில், தேசிய அளவிலும் பொருளாதார மந்தநிலை இருந்தாலும்  தமிழகத்தில் அதுபோல பொருளாதார மந்தநிலை இல்லை.

தொழிலதிபர்கள் தொழில் தொடங்க விரும்பி வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தொழில் துவங்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.
இந்திய தொழில் கூட்டமைப்பு அந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: