Home /News /business /

போட்டி போட்டுக் கொண்டு பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்!

போட்டி போட்டுக் கொண்டு பால் விலையை உயர்த்தும் தனியார் நிறுவனங்கள்!

பால்

பால்

தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் ஆரோக்யா, ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை போட்டி போட்டு உயர்த்தி வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனத்துடன் ஆரோக்யா, ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெசி, திருமலா ஆகிய தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

ஏற்கெனவே பால் விலையை கடந்த பிப்ரவரி மாதத்தில் தனியார் நிறுவனங்கள் உயர்த்தின. இந்த நிலையில், ஆரோக்யா, ஹெரிட்டேஜ் பால் விலை கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் மீண்டும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கொள்முதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கூலி ஆகியவற்றைக் காரணமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஆரோக்கியா புல்கிரீம் ஒரு லிட்டர் பால் 54 ரூபாயில் இருந்து 56 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு 42 ரூபாயில் இருந்து 44 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல், ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 52 ரூபாயில் இருந்து 54 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பே திருமாலா புல்கிரீம் ஒரு லிட்டர் பாலின் விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டாலும், விற்பனை பாதிக்கப்படவில்லை என பால் விற்பனையாளர் ராஜாராமன் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Milk

அடுத்த செய்தி