பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் ஆவணத்தை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மத்திய பட்ஜெட் 2023-24 இல் பல்வேறு புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக கணிக்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கமாக உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு அவர்களின் பிரச்சனைகளை அணுகும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நடுத்தர குடும்பங்கள் எதிர்பார்க்கும் சில வரி விலக்கு வரம்பு உயர்வு முதல் வேலைவாய்ப்புகள் வரை இந்த 2023 பட்ஜெட்டில் உள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மக்களின் எதிர்பார்ப்பு:
2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் பட்ஜெட் 2023-இன் கடைசி முழு பட்ஜெட்டாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற எல்லாத் துறைகளைப் போலவே, சம்பளம் பெறும் வகுப்பினரும் தற்போது வரவிருக்கும் பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். 2023 பட்ஜெட்டில் அரசாங்கத்திடம் இருந்து நடுத்தர வர்க்க மக்கள் பல்வேறு சலுகைகளை எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வேலைவாய்ய்பு:
உலகளாவிய கொரோனா பெருத்தொற்று காரணமாக பல தரப்பட்ட மக்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். வரவிருக்கும் யூனியன் பட்ஜெட் 2023-24 இல், அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கத்தினர் வலியுறுத்துகின்றனர். அப்போது தான், பொருளாதாரம் மேம்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வரி விலக்கு:
2023 பட்ஜெட்டில், அடிப்படை வரி விலக்கு வரம்பை தற்போதைய ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த நடுத்தர வர்க்கத்தில் வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம், வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வரி செலுத்துவோர் விரும்புகின்றனர் என்பது முக்கிய தகவலாகும்.
கல்வி கட்டணம்:
நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C வரி விலக்குகளில் இருந்து ஒரு தனி விதிக்கு மாற்ற வேண்டும் என்று கோருகின்றனர். இது ஏற்கனவே முதலீடுகள்/செலவுகள் உட்பட பல விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், ரூ. 1.5 லட்சம் வரம்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : Budget 2023 : பட்ஜெட் எப்படி தயார் செய்யப்படுகிறது? தேதி, நேரம் குறித்த முழு விவரம்
மருத்துவ காப்பீடு:
பல நடுத்தர வர்க்கத்தினர் வரி விலக்கு குறித்து இந்த 2023 படிக்கெட்டில் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். அதன்படி, 80டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீட்டிற்கான வரி விலக்கு தொகையை ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்க நடுத்தர வர்க்கத்தினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என்றும் பலர் கருதுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட, அனைத்து விதமான எதிர்பார்ப்புகளும் நடுத்தர வர்க்கத்தினரும் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இவை இந்த 2023 பட்ஜெட்டில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Budget Session, Union Budget 2023