• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்தி உலகின் விலைமதிப்பு நிறுவனமாக மாறியது எதுவென்று தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்தி உலகின் விலைமதிப்பு நிறுவனமாக மாறியது எதுவென்று தெரியுமா?

மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட்

கடந்த 2010ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை விட அதிவேகமாக அதிகரித்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக முதலிடத்தை பெற்றது.

  • Share this:
உலகில் உள்ள அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி சமீபத்தில் ஒரு நிறுவனம் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விலை மதிப்புமிக்க நிறுவனமாக உருவாக்கியுள்ளது சத்ய நாதெள்ளாவின் தலைமையில் இயங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 4.4 பில்லியன் டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தது. இதற்கான முக்கியமான காரணமாக அஸ்யூர் கிளவுட் கம்ப்யூட்டிங் வணிகத்தில் மைக்ரோசாஃப்ட் பெரிய வளர்ச்சியை கண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் பங்குகளின் வளர்ச்சி 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு 326.17 டாலர்கள் ஆகும்.

இதன் மூலமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூலதனம் 2.42 பல்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஆப்பிள் ஐஎன்சி இன் சந்தை மதிப்பு கடந்த வெள்ளியன்று 2 சதவீதம் அளவுக்கு குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய பங்குகளை மீண்டும் வாங்கும் (buyback)பழக்கத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 90 பில்லியன் டாலர்கள் அளவிலான பங்குகளை ஆப்பிள் நிறுவனம் பைபேக் மூலமாக வாங்கியது.

கடந்த 2010ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை விட அதிவேகமாக அதிகரித்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக முதலிடத்தை பெற்றது. தொடர்ச்சியாக ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சந்தையில் முதலிடத்தில் வகித்து வந்துள்ள நிலையில் தற்போது ஐபோன்களில தேவையை பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் விநியோகச் சங்கிலியில் பிரச்சினைகள் எதிர்கொள்வதை முதலீட்டாளர்கள் கவனித்து வந்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்த படி விநியோகச் சங்கிலியை கடைப்பிடிக்க முடியாத காரணத்தால் இந்த பங்குகள் குறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, சமீப காலத்தில் ஆப்பிள் பங்குகள் 12 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தன. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவைகள் அதிகப்படியான வளர்ச்சி பெற்றுள்ள காரணமாக, இந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

Also read... ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

இதனால் தற்போது உலகின் முதன்மையான நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாகியுள்ளது. மேலும், வல்லுநர்களின் கணிப்புப் படி, ஆப்பிள் விநியோகச் சங்கிலியை நேர்த்தியாக நிர்வகித்தாலும், கூடுதல் அழுத்தத்தை ஆப்பிள் நிறுவனம் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பல நாடுகளிலும் இனி விடுமுறைக்காலம் தொடங்க இருப்பதால், ஆப்பிளின் பெர்ஃபார்மன்ஸ் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.

அதற்கு எதிர்மாறாக, இந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்தடுத்த காலாண்டுகளிலும், கிளவுட் வணிகம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், நிறுவனத்தின் மதிப்பு கணிசமாக உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் சில புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: