வாரத்துக்கு 4 நாட்கள் பணியாற்றினால் போதும்... மைக்ரோசாப்ட்டின் புது ஐடியா!

மைக்ரோசாஃப்ட்

விடுமுறை, பிடித்த நேரம் வேலை செய்யலாம் போன்ற சலுகைகள் பணியாளர்கள் நேரம் விரயம் செய்வதையும் தடுத்துள்ளதாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாரத்துக்கு ஐந்து நாட்கள் பணி என்பது ஐடி நிறுவனங்களின் வழக்கமாகும். ஆனால், ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிக்க வாரத்துக்கு 4 நாட்கள் பணியாற்றினால் போதும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

பணியாளர்கள் தங்கள் பணி நேரத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்வது பணிக்கும் பெர்சனல் வாழ்க்கைக்கும் நல்லது என்பதை உணர்ந்து இதைச் செயல்படுத்துவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம்தான் மைக்ரோசாஃப்ட் தனது நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு குழுவைச் சேர்ந்த 2,300 பணியாளர்களுக்கு மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அறிவித்தது. இந்த அத்தனை விடுமுறைகளும் ஊதியத்துடனே வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியின் தரம் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் உறுதிபடுத்தியுள்ளது.

விடுமுறை, பிடித்த நேரம் வேலை செய்யலாம் போன்ற சலுகைகள் பணியாளர்கள் நேரம் விரயம் செய்வதையும் தடுத்துள்ளதாம். நேர விரயம் 25.4% குறைந்துள்ளதாம். கூடுதலாக மின் கட்டணம், பேப்பர் வேஸ்டேஜ் போன்ற பல நன்மைகளும் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளதாம்.

மேலும் பார்க்க: செலவைக் குறைக்க 13ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் காக்னிசென்ட்!

நீர்நிலைகள் தூர்வார ஒன்றிணைந்த இளைஞர்கள்
Published by:Rahini M
First published: