ஹோம் /நியூஸ் /வணிகம் /

செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!

செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

Microsoft | உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஊழியர்களை குறைக்கும் அல்லது பணியமர்த்துவதை மெதுவாக்கும் செயல்முறையை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஃபிளிப்போர்ட் மற்றும் ஸ்னாப் போன்ற நிறுவனங்களை தொடர்ந்து முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சத்தமில்லாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. மைக்ரோசாப்ட் தனது நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பல நாடுகளில் பணியாற்றி வந்த சுமார் 1000 ஊழியர்களை சமீப நாட்களில் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  சமீபத்திய அறிக்கைகளின்படி மைக்ரோசாப்ட் அனைத்து நாடுகளிலும் உள்ள குழுக்களில் இருந்து கிட்டத்தட்ட 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் தனது மூன்றாவது சுற்று பணிநீக்கத்தை செயல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அல்லது அவர்களை நண்பர்களாக கொண்டவர்கள் சோஷியல் மீடியாவில் இந்த செய்தியை ஷேர் செய்ததை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இதுபற்றிய விவாதம் எழுந்தது.

  இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் செய்துள்ள பணிநீக்கங்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும், Axios-ஸின் அமெரிக்க செய்தி அறிக்கை சுமார் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை கடந்த ஜூலை மாதமே நிறுவனத்தால் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

  Read More: கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்தியா - காரணம் என்ன?

   உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஊழியர்களை குறைக்கும் அல்லது பணியமர்த்துவதை மெதுவாக்கும் செயல்முறையை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ஏற்கனவே Meta Platforms Inc, Twitter Inc மற்றும் Snap Inc உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக மெட்டா நிறுவனம் படிப்படியாக சுமார் 12,000 பேரை குறைக்க திட்டமிட்டுள்ளது.

  இதனிடையே அமெரிக்காவை தளமாக கொண்ட Axios News செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், அனைத்து நிறுவனங்களைப் போலவே நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப கட்டமைப்பு மாற்றங்களை செய்கிறோம். நாங்கள் எங்கள் வணிகத்தில் தொடர்ந்து முதலீடு செய்வோம் மற்றும் வரும் ஆண்டில் முக்கிய வளர்ச்சிப் பகுதிகளில் பணியமர்த்துவோம் என கூறி இருக்கிறது.

  அதிகரித்து வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்தல் செயல்முறையை முடக்கி, ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து வருகின்றன. இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, இன்டெல், கூகுள் போன்ற ஐடி ஜாம்பவான்களும் கூட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  Read More: காலநிலை மாற்றத்தால் மாறும் ஆர்க்டிக் கடல்... ஒலிகளை சேகரிக்க கடலுக்குள் ஹைட்ரொபோன்கள் -புதிய ஆய்வு

   இதில் மூன்லைட்டிங் காரணமாக சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், தொழில்நுட்ப நிறுவனங்களும் பிற நிறுவனங்களும் சர்வதேச பொருளாதாரம் முன்னேற்றமடையும் வரை தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே போல கடந்த மாதம் ஊழியர்களுடன் வாராந்திர கேள்வி பதில் அமர்வின் போது, மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், தங்களது நிறுவனமானது பெரும்பான்மையான குழுக்களின் செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதை வெளிப்படுத்தினார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: IT Industry, Microsoft