Home /News /business /

ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட், கூகுள்... ஐடி ஊழியர்கள் கவலை

ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட், கூகுள்... ஐடி ஊழியர்கள் கவலை

microsoft

microsoft

Microsoft and Google | அமெரிக்காவில் ஜூன் மாத பணவீக்கம் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவு 9.1 சதவீதமாக அதிகரி்த்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை, வீட்டு வாடகை, ஊழியர்கள் ஊதியம் கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மிகப்பெரிய டெக் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்திலிருந்து 1800 பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஆலோசனைப் பிரிவு வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு உள்ளிட்ட ( consulting customer and partner solutions ) பல்வேறு குழுக்களில் வேலைகளை மைக்ரோசாப்ட் குறைத்துள்ளது. இந்த நடவடிக்கை அதன் பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களை பாதித்துள்ளது. கடந்த ஜூன் 30 அன்று நிதியாண்டு முடிவடைந்த பிறகு, மைக்ரோசாப்ட் அதன் வணிகக் குழுக்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை மறுசீரமைத்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ப்ளூம்பர்க் (Bloomberg) அறிக்கை கூறுகிறது.

அதேநேரம் மற்ற பணிகளுக்கான பணியமர்த்துவதைத் தொடரவும், நடப்பு நிதியாண்டை அதிக தொழிலாளர்களின் எண்ணிக்கையுடன் முடிக்கவும் மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது."இன்று நாங்கள் மற்ற நிறுவனங்களைப் போலவே, சிறிய எண்ணிக்கையிலான பணி நீக்கங்களை செய்துள்ளோம். நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம். நாங்கள் எங்கள் வணிகத்தில் தொடர்ந்து முதலீடு செய்வோம், மேலும் வரும் ஆண்டில் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம்" என்ற மைக்ரோசாப்ட்டின் மின்னஞ்சல் அறிக்கையை ப்ளூம்பெர்க் மேற்கோள் காட்டி உள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து புதிய ஊழியர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள், அதில் எந்த மாற்றமும் இல்லை என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஏறக்குறைய 1.80 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் வெறும் 1 சதவீதம் பேர், அதாவது 1800 ஊழியர்கள் மட்டும்தான் நீக்கப்பட்டுள்ளனர் என்பதால், இது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.



மற்றொரு அறிக்கையின்படி, கூகுள் நிறுவனம் (Alphabet Inc) பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு, ​​​​வரும் நிதியாண்டு முழுவதும் புதிதாக வேலைக்கு அமர்த்துவோரை குறைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது என தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, கடந்த 12ஆம் தேதி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார். ”அதற்கு பதிலாக, பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு கவனம் செலுத்தி 2022, 2023ம் ஆண்டில் பணியாளர்கள் எடுக்கப்படுவார்கள். நம்முடைய பணி மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும், ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் இருக்க வேண்டும். அதை நோக்கி முன்னேற வேண்டும்” எனவும், ”அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் ஆகியவை காரணமாக இந்த முடிவை எடுப்பதாகவும்” சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Also Read : கூகுள் இந்தியாவின் ஸ்டார்ட் அப் பள்ளி - வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் பயிற்சிகள் ஆரம்பம்.!

அமெரிக்காவில் ஜூன் மாத பணவீக்கம் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவு 9.1 சதவீதமாக அதிகரி்த்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை, வீட்டு வாடகை, ஊழியர்கள் ஊதியம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு செலவைக் குறைக்க முயல்கின்றன. பொருளாதார மந்தநிலை, மற்றும் பணவீக்கம் போன்றவை மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற டெக் உலகின் ஜாம்பவானான நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை.
Published by:Selvi M
First published:

Tags: Google, Microsoft

அடுத்த செய்தி