இந்தியத் தொழிற்துறைக்கு உதவ 54 ’ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களைத் தத்தெடுத்த மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட்

’கடைநிலையில் நல்ல திட்டங்கள் உடன் உள்ள நிறுவனங்களை ஆதாரித்து உயர்த்துவதன் மூலம் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி அடையும்’.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய முயற்சியின் கீழ் 54 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

  குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மைக்ரோசாஃப்ட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்காகப் பிரத்யேகப் போட்டிகள் நடத்தப்பட்டு இந்நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  மொத்தம் வந்த 530 விண்ணப்பங்களிலிருந்து மாநிலத்துக்கு சராசரியாக மூன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்ற கணக்கில் 54 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன. இந்த 54 நிறுவனங்களும் உள்ளூர் அரசு அமைப்புகளுடன் இணைந்து வளர்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

  தொடர்ந்து கடைநிலையில் நல்ல திட்டங்கள் உடன் உள்ள நிறுவனங்களை ஆதாரித்து உயர்த்துவதன் மூலம் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி அடையும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

  மேலும் பார்க்க: #BoycottWindows ஹேஷ்டேக் பதிவிடுவோரைக் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..!
  Published by:Rahini M
  First published: