• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 2019 பார்ச்சூன் தொழில் வல்லுநர்கள் பட்டியலில் இந்தியருக்கு முதலிடம்..!

2019 பார்ச்சூன் தொழில் வல்லுநர்கள் பட்டியலில் இந்தியருக்கு முதலிடம்..!

சத்யா நாடெல்லா

சத்யா நாடெல்லா

கணினி ஆய்வாளரான சத்யா நாடெல்லா கடந்த 2014-ம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆகப் பணியாற்றி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில் வல்லுநர்களில் டாப் 20 பட்டியலை பார்ச்சூன் வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவில் பிறந்தவரான மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாடெல்லா உள்ளார். இந்த டாப் 20 பட்டியலில் மொத்தம் மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். மாஸ்டர்கார்டு சிஇஓ அஜய் பங்கா மற்றும் அரிஸ்டா தலைவர் ஜெயஸ்ரீ உல்லால் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.

திறமை, ஆளுமை, தலைமைப்பண்பு, அணியை வழிநடத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பார்ச்சூன் டாப் 20 தொழில் வல்லுநர்கள் பட்டியலைத் தயாரித்துள்ளது. மாஸ்டர்கார்டு சிஇஓ அஜய் பங்கா இப்பட்டியலில் 8-ம் இடம் பிடித்துள்ளார். அரிஸ்டா தலைவர் ஜெயஸ்ரீ உல்லால் 18-ம் இடம் பிடித்துள்ளார்.

பங்கா மற்றும் உல்லால் ஆகியோர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தோர். கணினி ஆய்வாளரான சத்யா நாடெல்லா கடந்த 2014-ம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் சிஇஓ ஆகப் பணியாற்றி வருகிறார். தொழில் சார்ந்து எந்தவொரு கல்வியும் பயிற்சியும் இல்லை என்றாலும் ஒரு சிஇஓ ஆக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் சத்யா நாடெல்லா.

இப்பட்டியலில் உலகின் முன்னனி தொழில் ஆளுமைகள் ஆன Puma சிஇஓ ஜோர்ன் குல்டன் 5-ம் இடத்தில், ஜேபி மோர்கன் சிஇஓ ஜேமி டைமன் 10-ம் இடத்தில், அக்சஞ்சர் சிஇஓ ஜூலி ஸ்வீட் 15-ம் இடத்தில் மற்றும் அலிபாபா சிஇஓ டேனியல் ஜாங் 16-ம் இடத்திலும் உள்ளனர்.

மேலும் பார்க்க: எஸ்.பி.ஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு..?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: