ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஆட்குறைப்பு, செலவுகள் கட்டுப்பாடு..ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனத்துக்கு புதிய கெடுபிடிகள்!

ஆட்குறைப்பு, செலவுகள் கட்டுப்பாடு..ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனத்துக்கு புதிய கெடுபிடிகள்!

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

மெட்டா நிறுவனம் பல்லாயிரம் பில்லியன்களை செலவழித்து உலகம் முழுவதிலுமிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமீப காலமாக பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. குறிப்பாக, உலக அளவில் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை நீக்கம் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம். இணைய சேவைகள், ஆன்லைன் சேவைகள், OTT பொழுதுபோக்கு என்று எல்லா தேவைகளுமே அதிகரித்துள்ள நிலையில், ஏன் ஆட்குறைப்பு என்ற கேள்வியும் எழுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கணிசமாக சரிந்து, அதன் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்தது.

  இந்நிலையில், ஃபேஸ்புக் தளத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவிற்கு, அதனுடைய பங்குதாரர்களிடம் இருந்து புதிய கெடுபிடிகள் கூறப்பட்டுள்ளன. மெடா நிறுவனம் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்டிமீட்டர் கேபிடல் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டாவின் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸுக்கர்பெர்கிற்கு ஒரு அறிக்கையை அளித்துள்ளது.

  இதில் மெட்டாவில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்றும், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு பகிரங்கமான ஒரு அறிவிப்பை வெளிப்படுத்தியதற்கு என்ன காரணம் என்று இங்கே பார்க்கலாம்.

  Read More : அக்டோபர் மாதம் என்றாலே வாட்ஸ்அப்பிற்கு பிரச்சனை தான்.!

  மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது, நிறுவனம் எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்ற கண்ணோட்டத்தில் தான் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்படும். மெட்டா நிறுவனத்திலும் அத்தகைய தொலைநோக்கு கண்ணோட்டத்தோடுதான் கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டன. ஆனால் தற்போது மெட்டாவின் பல்வேறு செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மேலும், திட்டமிட்டபடி மெட்டா இயங்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நிறுவனம் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  மெடாவர்ஸ் என்ற விர்ச்சுவல் தொழில்நுட்ப உலகை உருவாக்குவதற்காக, மெட்டா நிறுவனம் பல்லாயிரம் பில்லியன்களை செலவழித்து உலகம் முழுவதிலுமிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது. கதைகளில் மட்டுமே இதுவரை  கேள்விப்பட்டிருக்கும் விர்ச்சுவல் உலகம் என்பது உண்மையிலேயே மெட்டாவால் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில்தான் தற்போது ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்று மெட்டாவின் பங்குதாரர் வலியுறுத்தி இருக்கிறார்.

  அல்டிமீட்டர் நிறுவனம் ஒரு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதில் மெட்டாவில் பணியாற்றும் ஊழியர்களில் 20% வரை பணி நீக்கம் செய்வதன் மூலமாக, 40 பில்லியன் டாலர்கள் கேஷ் ஃபிளோ அதிகரிக்கும், கேபிட்டல் செலவுகள் 5 பில்லியன் முதல் 25 பில்லியன் டாலர்கள் வரை குறையும், முதலீடு ஐந்து பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

  ரியாலிட்டி லேப் யூனிட் என்ற தனிப்பிரிவு, விர்ச்சுவல் ரியாலிட்டியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே இந்த யூனிட் 5.8 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது. மூன்று கட்ட திட்டமாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று நேர்த்தியாக திட்டம் போடப்பட்டு இருந்தாலும், மெட்டா தோல்வி அடைந்து வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு மெட்டாவால் செயல்படுத்த முடியவில்லை என்பதை ரியாலிட்டி லாப்ஸ் யூனிட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் மூலம் தெரிகிறது.

  Read More : இந்த ஆப்களால் உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டிற்கு ஆபத்து - மெட்டா எச்சரிக்கை

  ஏற்கனவே பேஸ்புக்கின் பங்குகள் சரிந்து, மார்க் ஜூக்கர்பர்கின் சொத்து மதிப்பு குறைந்த நிலையில், மெடாவில் முதலீடு செய்திருக்கும் அல்டிமீட்டர் நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தது பயமாக இருக்கிறது, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

  உலகம் முழுவதுமே பொருளாதார ரீதியாக பணவீக்கம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் யார் எப்பொழுது வேலையிலிருந்து நீக்கப்படுவார் என்ற அச்சம் ஊழியர்களிடையே தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதமே ஃபேஸ்புக்கின் 30 சதவிகித ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை மார்க் ஜுக்கர்பெர்க் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

  தற்பொழுது மெடாவர்ஸ் ஆரம்ப கட்டத்திலேயே பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டு, இழப்பை சந்தித்து வருவதால் இதை தடுப்பதற்கு கூடுதலாக பணி நீக்கம் செய்யப்படும் என்ற தவிர்க்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இதுவரை இதை பற்றி மெட்டா தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Facebook, Facebook article