Home /News /business /

Jio Mart- WhatsApp: வாட்ஸ்அப் சாட்டில் ஜியோ மார்ட் ஷாப்பிங் செய்வது எப்படி?

Jio Mart- WhatsApp: வாட்ஸ்அப் சாட்டில் ஜியோ மார்ட் ஷாப்பிங் செய்வது எப்படி?

ஜியோ மார்ட்

ஜியோ மார்ட்

Jio Mart- WhatsApp: மார்க் ஜுக்கர்பெர்க், இந்தியாவில் ஜியோமார்ட் உடனான பிளாட்ஃபார்ம் கூட்டாண்மையை தொடங்குவதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் இணைந்து வாட்ஸ்அப்பின் மூலம் எண்ட்-டு-எண்ட் ஜியோமார்ட் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

ஜியோமார்ட் ஷாப்பிங் செய்ய உதவும் வாட்ஸ் ஆப் பாட்( bot ) ஆனது ஜியோவின் தொழில்நுட்ப பிரிவான ஹாப்டிகால் (Haptik) கட்டமைக்கப்பட்டுள்ளது. இது 20 சேனல்கள் மற்றும் 100+ மொழிகளில் AI- தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும். தனிப்பயனாக்கப்பட்ட, உரையாடல் அனுபவங்களுடன் பயனர்களைப் ஷாப்பிங்கில் ஈடுபடுத்த உதவுகிறது.

விந்து மற்றும் முட்டை இன்றி உருவாக்கப்பட்ட செயற்கை கரு - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு

  • ஷாப்பிங்செய்வது எப்படி?
    வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியில் +91 7977079770 எனும் ஜியோமார்ட் எண்ணை பதிந்துகொள்ள வேண்டும்.

  • பின்னர் இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து 'ஹாய்' என்று அனுப்புவதன் மூலம் ஜியோமார்ட்டில் ஷாப்பிங்கைத் தொடங்கலாம்.

  • அதன் பின்னர் ஷாப்பிங் செய்யும் உறுதிப்பாட்டைக் கேட்கும். அதை செய்ததும் அடுத்த நிலைக்கு நகரும்.

  • அதில் பயனர் வசிக்கும் பகுதியின் பின்கோடு கேட்கப்படும் .

  • உள்ளிடத்தும் ஜியோமார்ட்டின் கேட்லாக் திறக்கும்.

  • சமையல் பொருட்கள், வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், தின்பண்டங்கள், பால் பொருட்கள் என்று வகைப்படுத்த பட்டிருக்கும்.

  • எல்லா வகையான மளிகை மற்றும் வீடு உபயோக பொருட்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

  • பொருட்களை தேர்ந்த்தேர்ந்தெடுத்த பின்னர் தேர்ந்தெடுத்த பொருட்களின் இறுதி பட்டியல் வரும்.

  • அதை சரிபார்த்த பின்னர் உறுதி செய்ய கேட்கும்.

  • அதன் அடுத்தகட்டமாக பயனரின் முழு முகவரியை உள்ளிட்ட சொல்லும்.

  • அதையும் உள்ளிட்டு, உறுதிப்படுத்தவேண்டும்.

  • உறுதிசெய்தபின் பணம் செலுத்தும் வழிகளை தேர்ந்தெடுக்க சொல்லும்.

  • கேஷ் ஆன் டெலிவரி, வாட்சப் மூலம் பணம் செலுத்துதல், ஜியோ மார்ட் மூலம் பணம் செலுத்துதல் என்று 3 வாய்ப்புகள் உள்ளது.

  • அதை உறுதி செய்ததும் ஆர்டர் இறுதியாகி வீட்டுக்கு அனுப்பப்படுகிறது.

  •  நேரே வீட்டிற்கே கொண்டுவந்து தருகின்றனர்.

  • டெலிவரி முற்றிலும் இலவசம்.


திரும்ப வந்துட்டேனு சொல்லு.. மின்சாரப்பேருந்து வடிவில் மும்பையில் மீண்டும் வரும் டபுள் டெக்கர் பேருந்துகள் !

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜியோ மற்றும் மெட்டா தங்கள் கூட்டாண்மையை அறிவித்தபோது, ​​அவரும் மார்க் ஜுக்கர்பெர்க்கும் ஆன்லைனில் அதிகமான நபர்களையும் வணிகங்களையும் கொண்டு வருவதற்கான பார்வையை பகிர்ந்து கொண்டதாகவும், ஒவ்வொரு இந்தியரின் அன்றாட வாழ்க்கைக்கும் வசதியை சேர்க்கும் உண்மையான புதுமையான தீர்வுகளை உருவாக்குவதாகவும்  முகேஷ் அம்பானி கூறினார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: JioMart, Reliance Jio, WhatsApp

அடுத்த செய்தி