இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகும் செல்லும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
2020 ஏப்ரலில், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியன்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கிகள் இணைக்கப்பட்டன. கனரா வங்கியுடன், சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டது. இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை இணைக்கப்பட்டன.
புதிய வங்கியிலும், பழைய கணக்கு எண்களையே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இணைக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட்ட காசோலைகள், ஏப்., 1 முதல் செல்லாது என, தகவல்கள் பரவி வருகின்றன.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறும்போது, “வங்கிகள் இணைக்கப்பட்டதும், முதலில் மென்பொருள் இணைக்கும் பணி நடந்தது. பணிகள் முழுமையாக முடிந்தாலும், சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.வங்கியின், 'தி இந்தியன் பைனான்சியஸ் சிஸ்டம் கோடு' எனப்படும், ஐ.எப்.எஸ்.சி., கோடு; 'மேக்னடிக் இங்க் ரெகக்னிஷன் டெக்னாலஜி' எனும், எம்.ஐ.சி.ஆர்., கோடு ஆகியவை மாற்றப்பட்டுள்ளன.
இது குறித்து, வாடிக்கையாளர்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம்.பழைய காசோலைகளை ஒப்படைத்து விட்டு, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின்பும், பழைய காசோலைகள் செல்லும். பழைய காசோலை பயன்பாடு, உடனடியாக நிறுத்தப்படாது, அதற்கு அவகாசம் வழங்கப்படும், என்று தெரிவித்தனர்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.