ஹோம் /நியூஸ் /வணிகம் /

அமுலுடன் 5 கூட்டுறவு சங்கங்கள் இணைத்து, புதிய சங்கம் உருவாக்க திட்டம்! -அமித் ஷா அறிவிப்பு

அமுலுடன் 5 கூட்டுறவு சங்கங்கள் இணைத்து, புதிய சங்கம் உருவாக்க திட்டம்! -அமித் ஷா அறிவிப்பு

அமுல்

அமுல்

இந்தியாவில் ஆனந்த் குரியனால் தொடங்கப்பட்ட வெள்ளை புரட்சியில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பால் கூட்டமைப்பே அமுல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  வடகிழக்கு கவுன்சிலின் (NEC) 70வது முழு அமர்வில் உரையாற்றிய அமித் ஷா பல மாநில கூட்டுறவு சங்கத்தை (MSCS) உருவாக்க அமுல் மற்ற ஐந்து கூட்டுறவு சங்கங்களுடன் இணைக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும் இணைப்புக்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றார்.

  “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது, மேலும் இயற்கை பொருட்களின் சான்றிதழுக்காக அமுல் மற்றும் 5 கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநில கூட்டுறவு சங்கத்தை (MSCS) உருவாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

  எம்.எஸ்.சி.எஸ்., அதன் அரசின் சான்றிதழைப் பெற்ற பிறகு அதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் கிடைக்கும் லாபம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும், என்றார்.

  இதையும் படிங்க:  ஹால்மார்க் எவற்றுக்கு பொருந்தும்? எவற்றுக்கு பொருந்தாது?

  இந்தியாவில் ஆனந்த் குரியனால் தொடங்கப்பட்ட வெள்ளை புரட்சியில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பால் கூட்டமைப்பே அமுல். அதற்கு அடுத்து தான் மற்ற மாநிலங்களிலும் ஆவின், நந்தினி, விஜயா, மில்மா, மதர் டைரி போன்ற கூட்டமைப்புகள் உருவானது.குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் அதன் தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது.

  முன்னதாக வெள்ளிக்கிழமை, காங்டாக்கில் நடந்த வடகிழக்கு கூட்டுறவு பால் பண்ணை மாநாட்டில் பேசிய ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இது உள்நாட்டு சந்தையின் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல, அண்டை நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

  பூடான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பாலை வழங்க நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. இதன் வழியில் உலக சந்தையை ஆராயவே, அரசாங்கம் பல மாநில கூட்டுறவை நிறுவுகிறது. இது பிற்காலத்தில் ஏற்றுமதி நிறுவனமாக செயல்படும் என்று அவர் கூறினார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Amit Shah, Amul, Milk