கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மிகவும் லாபகரமான ஆண்டாக இருந்துள்ளதாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறை, கடந்த ஆண்டு எழுச்சி பெற்று பல்வேறு புதிய உச்சங்களை தொட்டுள்ளது. உலகம் முழுவதும் கார் விற்பனையானது அதிகரித்துள்ளது. மேலும் மின்சாரத்தில் இயங்கும் கார்களின் வரவால் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
அதற்கு மாறாக எரிபொருளில் இயங்கும் கார்களின் விற்பனை அதிகரித்தது போலவே, மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது கார்களை மிக அதிக அளவில் மக்களிடம் விற்பனை செய்துள்ளனர். கடந்த 22 ஆம் ஆண்டு சொகுசு கார்கள் தயாரிப்பதில் பிரபலமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2.05 மில்லியன் எண்ணிகையிலான பயணிகள் காரை விற்பனை செய்துள்ளது.
ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் கார் விற்பனையானது 1% குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் கொரோனா தொற்றினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுபாடுகளும், உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும் ஆகும். அதே சமயத்தில் கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனையானது 17% வரை அதிகரித்துள்ளது.
அந்த சமயத்தில் தான் கொரோனா தொற்றுகள் முடிவுக்கு வந்து, தளவாடங்கள் மற்றும் விநியோக துறைகளில் இருந்து வந்த கட்டுப்பாட்டுகள் சற்று தளர்த்தப்பட்டதால் இது சாத்தியமானது. மேலும் கடந்த ஆண்டில் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் வகை கார்களின் விற்பனையானது 124% வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது. அதாவது கடந்தாண்டில் 1,17,800 எண்ணிகையிலான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் மேபேக் வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது கடந்தாண்டில் ஜப்பான், கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 37 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த நாடுகளில் சீனாவில் மட்டும்தான் ஓராண்டிற்கான விற்பனையாளது ஒரு சதவீதம் அளவு குறைந்து வருகிறது. ஐரோப்பாவில் ஒரு சதவீதமும் வட அமெரிக்காவில் மூன்று சதவீதமும் விற்பனை அதிகரித்துள்ளது. இதைத் தவிர உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளில் கார் விற்பனை 27% குறைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடந்த போர் இதற்கு முக்கிய காரணமாகும்.
கூடுதலாக தொடக்கநிலை வாகனங்களின் விற்பனையானது 10% அளவு குறைந்துள்ளது. தளவாடங்கள் மற்றும் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தான் இதற்கும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Business, Mercedes benz