ஹோம் /நியூஸ் /வணிகம் /

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் உயரக சொகுசு கார்களின் விற்பனை விகிதம் அதிகரிப்பு!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் உயரக சொகுசு கார்களின் விற்பனை விகிதம் அதிகரிப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை 11,469 கார்களை நாங்கள் விற்பனை செய்துள்ளோம்-விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல் துறையின் துணைத்தலைவரான சந்தோஷ் ஐயர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனது நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புடைய உயர் ரக சொகுசு கார்களின் விற்பனையானது கிட்டத்தட்ட 60% க்கும் மேல் அதிகரித்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயர் ரக சொகுசு கார்களை தயாரிப்பதில் மிகப் பிரபலமானதும், மக்களுக்கு பரிச்சயமானதுமான நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ். சமீபத்தில் இந்த நிறுவனம் அளித்த அறிக்கை படி, ஒரு கோடிக்கும் மேல் மதிப்புடைய உயரக சொகுசு கார்களுக்கான விற்பனை விகிதம் 68 சதவீதம் வரை அதிகரித்த்ள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான கணக்கெடுப்பில் இந்த தரவுகள் தெரிய வந்துள்ளன.

அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல் துறையின் துணைத்தலைவரான சந்தோஷ் ஐயர் கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை 11,469 கார்களை நாங்கள் விற்பனை செய்துள்ளோம். இந்த விற்பனை விகிதமானது கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. மேலும் இதில் உயர்ரக சொகுசு வாகனங்கள் மட்டும் 30 சதவீதம் அளவு விற்பனையாகியுள்ளன. இது இந்தியாவில் சொகுசு கார்களுக்கான தேவையும் அதற்கான மார்க்கெட்டும் அதிகமாகி வருவதை காண்பிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Read More : வெறும் ரூ.10,000 இருந்தால் போதும்; இனி சில்லறை முதலீட்டாளர்களும் நல்ல வருமானம் பெறலாம்..!

மேலும் அடுத்த வருடம் ஜனவரி 1, 2023 முதல் இந்தியாவின் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி ஏற்க உள்ளார் சந்தோஷ் ஐயர். சொகுசு கார்களுக்கான மார்க்கெட் ஆனது குறைந்த விலை கார்களின் வரவால் அதிக அளவில் அடி வாங்கியது. ஆனால் இப்போது ஒரு ஆரோக்கியமான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சொகுசு கார்களை வாங்குவதற்கான மக்களின் விருப்பமும் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.

மேலும் இப்படிப்பட்ட சொகுசு கார்களை வாங்குவதற்கு ஏற்றவாறு மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதையும் காட்டுகிறது. மேலும் இப்பொழுது உள்ள 30% வளர்ச்சியானது மிக விரைவிலேயே 40% அடையும். ஏனெனில் நாங்கள் இன்னும் 7000 முன்பதிவு செய்யப்பட்ட கார்களை டெலிவரி செய்யாமல் இருக்கின்றோம். இவை அனைத்தையும் டெலிவரி செய்த பின் உயர்ரக சொகுசு கார்களின் விற்பனை விகிதமானது கிட்டத்தட்ட 40% அளவு அதிகரிக்கும் என்று கூறினார்.

சொகுசு SUV வகைகளில் GLE, 450, GLE 400d, GLS, GLS Maybach,ஆகியவையும் செடான் வகை கார்களில் S-class, S-class maybach, G-class, AMG E53, E63 AMG ஆகியவற்றுடன் எலக்ட்ரிக் செடான் வகை கார்களான Sedan SWS, EWS53 AMG ஆகிய சொகுசு கார்கள் ஒரு கோடிக்கும் அதிகமாக விலையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சமீபத்தில் அதிக எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் செடான் வகை EQS 580 என்ற காரும் ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.

இதைப் பற்றி குறிப்பிட்ட சந்தோஷ ஐயர், உயர்ரக கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் உள்ள முக்கிய பிரச்சனை அவற்றின் சரக்கிருப்பு ஆகும். வாடிக்கையாளர் ஆர்டர் செய்ததுமே எங்களால் அவற்றை டெலிவரி செய்ய முடியாது. இவற்றை இறக்குமதி செய்வதற்காக பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் எப்படி இருந்தாலும் இந்திய அளவிலும் உலக அளவில் உயர்ரக கார்களின் விற்பனை விகிதத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். தற்போது எங்களில் முழு கவனமும் இந்த உயர் ரக சொகுசு கார்களின் விற்பனை விகிதத்தை இன்னும் அதிகரிப்பதில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Mercedes benz