Home /News /business /

ரத்தன் டாடாவின் உதவியாளராக செயல்படும் 28 வயது ஷாந்தனு...

ரத்தன் டாடாவின் உதவியாளராக செயல்படும் 28 வயது ஷாந்தனு...

ரத்தன் டாடாவுடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் இந்த இளைஞர் யார் என்கிற கேள்வியை ஏராளமானோர் மனதில் விதைத்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் வெபினார் முறையில் ஆன்லைன் கருத்தரங்கத்தை ஷாந்தனு நடத்துகிறார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படும் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உதவியாளராக 28 வயதாகும் இளைஞர் ஷாந்தனு செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு, இணையத்தில் அதிகம் பாராட்டி பேசப்படுகிறது.

    வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் மிகச்சிறிய வயதில் இந்தியா முழுவதும் ஷாந்தனு அறியப்படுகிறார். அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ரத்தன் டாடாவும் ஒருவர்.

    தற்போது டாடா குழுமம் ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஏராளமானோருக்கு வாய்ப்பு அளிக்கிறது. டாடாவின் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ஷாந்தனு.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் கார்னெல் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை ஷாந்தனு முடித்துள்ளார். அவரது குடும்பத்தில் அவருடன் சேர்த்து 5வது தலைமுறையாக டாடா குழுமத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    ரத்தன் டாடாவுடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் இந்த இளைஞர் யார் என்கிற கேள்வியை ஏராளமானோர் மனதில் விதைத்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் வெபினார் முறையில் ஆன்லைன் கருத்தரங்கத்தை ஷாந்தனு நடத்துகிறார். இதற்காக ரூ. 500 யை ஒவ்வொரு பங்கேற்பாளர்களிடமும் பெற்றுக் கொள்கிறார்.

    இந்த கருத்தரங்கத்தில் போதுமான அளவு தகவல்கள் தெரிவிக்கப்படுவதால், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெபினாரில் திரட்டப்படும் பணம், ஷாந்தனுவின் மோட்டோ பாவ்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம், நாய்களுக்கென பிரத்யேக ஆடைகள், உபகரணங்களை தயாரித்து வழங்குகிறது. 20 இந்திய நகரங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் மோட்டோ பாவ்ஸின் கிளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    மோட்டோ பாவ்ஸ் குறித்த செய்தி, டாடா குழுமம் வெளியிடும் செய்தி அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதைப் படித்துப் பார்த்த ரத்தன் டாடாவுக்கு ஷாந்தனு மீது கவனம் திரும்பியது. ஏனென்றால் ஷாந்தனுவைப் போன்று டாடாவுக்கு நாய்கள் மீது ஈர்ப்பு அதிகம்.

    இதன் பின்னர், ரத்தன் டாடாவுக்கு ஷாந்தனு கடிதம் எழுத, அவரும் அதை படித்துப் பார்த்துவிட்டு சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கினார். சந்திப்புக்கு பின்னர் மோட்டோ பாவ்ஸ் நிறுவனத்தில் டாடா முதலீடு செய்தது. தற்போது நல்ல லாபம் கிடைக்கும் நிறுவனமாக மோட்டோ பாவ்ஸ் வளர்ந்துள்ளது.

    2018-ல் டாடாவில் ஷாந்தனு பணிக்கு சேர்ந்தார். தற்போது அவர் கிட்டத்தட்ட ரத்தன் டாடாவின் உதவியாளரைப் போன்று செயல்பட்டு வருகிறார். 81 வயதாகும் ரத்தன் டாடா, 28 வயதாகும் ஷாந்தனுவிடம் நண்பரைப் போன்று பழகி அன்றாட ட்ரெண்டுகள் குறித்து தன்னை அப்டேட் செய்து கொள்கிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ratan TATA

    அடுத்த செய்தி