Budget 2021: பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமனின் குழு உறுப்பினர்கள் இவர்கள் தான்!

Budget 2021: பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நிர்மலா சீதாராமனின் குழு உறுப்பினர்கள் இவர்கள் தான்!

நிர்மலா சீதாராமனின் டீம் உறுப்பினர்கள்

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் சோமநாதன் 1987ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் பிரிவு அதிகாரியாவார். செலவுகள் துறை செயலாளராக இருக்கும் சோமநாதன் ஏப்ரல் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்.

  • Share this:
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு திசை திருப்பும் ஊக்கத்தை பட்ஜெட் அளிக்கும் என்பதால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் பெருகிறது. பல்வேறு துறையினரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில் இந்த பட்ஜெட்டை உருவாக்கியிருக்கின்றனர். பட்ஜெட்டை தயாரித்திருக்கும் நிர்மலா சீதாராமனின் குழுவில் உள்ளவர்கள் குறித்து தற்போது அறிந்து கொள்வோம்.

அஜய் பூஷன் பாண்டே:

நிதியமைச்சகத்தில் உள்ள 5 செயலாளர்களில் அஜய் பூஷன் பாண்டே தான் மூத்தவர்.
வருவாய் செயலாளராக இருக்கும் அஜய், 1984ம் ஆண்டு மகாராஷ்டிரா பேட்ச் ஐஏஎஸ் பிரிவை சேர்ந்தவர் Unique Identification Authority of India அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியிருக்கும் இவர் மத்திய அரசின் மிக செல்வாக்கான நபராக விளங்குகிறார்.

வருவாய் துறையை தலைமை தாங்கி நிர்வகிக்கும் இவர் இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் இவருக்கு முன்னாள் இருக்கும் ஒரே சவால் வருவாய் பற்றாக்குறையை குறைப்பதே. (நிகர வரி வருவாய் பற்றாக்குறை ரூ .1.45 லட்சம் கோடியாக தற்போது உள்ளது.)

டி.வி. சோமநாதன்:

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் சோமநாதன் 1987ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் பிரிவு அதிகாரியாவார். செலவுகள் துறை செயலாளராக இருக்கும் சோமநாதன் ஏப்ரல் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து பட்ஜெட் தொடர்பான பரிந்துரைகள் சோமநாதன் மற்றும் பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் ஆகியோர் வழியாகவே நிதியமைச்சகத்துக்கு செல்லும்.

பல்வேறு துறைகளிலும் செலவுகளை கட்டுப்படுத்தியது, மிச்சப்படுத்தியிருப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்குபவர். செலவீனங்கள் தொடர்பான செயலர் என்பதால் பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு எவ்வளவு செலவுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக சோமநாதன் விளங்குகிறார்.

தருண் பஜாஜ்:

ஏப்ரல் 2020ல் நிதியமைச்சக பணியில் சேருவதற்கு முன்னர் 5 ஆண்டுகாலம் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ். மூன்று ‘ஆத்மனிர்பர் பாரத்’ நிவாரண நடவடிக்கைகளை வடிவமைக்க உதவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை வடிவமைத்தவரும் இவரே. தருண் பஜாஜ் 1988ம் ஆண்டு ஹரியானா பேட்ச் பிரிவு அதிகாரியாவார்.

துஹின் கண்டா பாண்டே:

முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை செயலாளர் பாண்டே பஞ்சாப் கேடரைச் சேர்ந்த 1987 பேட்ச் அதிகாரி. பல சறுக்கல்களுக்கு பின்னர் மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தின் தேவை தற்போது அவசியமாகிறது என்ற வகையில் அதனை செயல்படுத்துவதில் இவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறைக்கு முன்னாள் இருக்கும் தலையாய பணி என்பது பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், கான்கார், ஷிப்பிங் கார்பரேஷன், ஏர் இந்தியா நிறுவனங்களை தனியார்மயமாக்குவதாகும். அதே போல எல்ஐசியின் குறிப்பிட்ட பங்குகளை தனியார் வசமாக்குவதும்.

தெபஷிஷ் பாண்டா:

நிதி சேவைகள் செயலரான தெபஷிஷ் பாண்டா மீடியா முன்பு அதிகம் காணப்படாதவர். உத்தரப்பிரதேச கேடரைச் சேர்ந்த 1987 பேட்ச் அதிகாரி. நிதி சேவைகள் தொடர்பாக எதிர்பார்க்கப்படும் அனைத்து அறிவிப்புகளுக்கும் இவரே பொறுப்பானவர்.

கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்:

ரகுராம் ராஜனுக்கு பிறகு தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு வந்தவர். ஐஐடி, ஐஐஎம்களில் உயர்க்கல்வி பயின்றவர். சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆஃப் பிஸினஸிலும் படித்திருக்கிறார்.

இவரின் ஆலோசனைகளும், உள்ளீடுகளுமே பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இவர் தற்போதைய பதவிக்கு வரும் முன்னர் ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். எவ்வாறாயினும், இவரின் பெரிய பங்கு 2020-21 பொருளாதார கணக்கெடுப்பை உருவாக்கியதாகும்.
Published by:Arun
First published: