முகப்பு /செய்தி /வணிகம் / மளிகை விற்பனையை நிறுத்திய மீஷோ.. 300 ஊழியர்களின் வேலை பறிபோனது

மளிகை விற்பனையை நிறுத்திய மீஷோ.. 300 ஊழியர்களின் வேலை பறிபோனது

மளிகை பொருள் வணிகத்தை மூடிய மீஷோ நிறுவனம்

மளிகை பொருள் வணிகத்தை மூடிய மீஷோ நிறுவனம்

மளிகை பொருள் வணிகத்தை மீஷோ நிறுவனம் மூடியுள்ளதால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 300 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான மீஷோ(Meesho) தனது மளிகை பொருள் வணிகத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது. சூப்பரஸ்டோர் என்ற பெயரில் இயக்கும் இந்த வணிகம் 90 சதவீத நகரங்களில் தற்போது மூடப்பட்டுள்ளது. நாக்பூர் மற்றும் மைசூரு ஆகிய நகரங்களில் மட்டும் தான் நிறுவனம் தற்போது இயங்கி வருகிறது. கடந்த வாரம் இந்த கடைகள் தங்கள் வியாபாரத்தை நிறுத்தியுள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் இந்த நிறுவனத்தில் வேலை செய்த 300க்கும் மேற்பட்டோர் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.

நிறுவனத்தின் மேலாளர், சேல்ஸ் பிரிவினர், சந்தை நுண்ணறிவு துறை நிர்வாகிகள், வேர்ஹவுஸ் மேலாளர்கள் என 300 நேரடி மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் வேலை பறிபோனது. இது தொடர்பாக நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா என நாடு முழுவதும் 6 மாநிலங்களில் மீஷோ சூப்பர் ஸ்டோர் இயங்கி வந்தன. கடந்த ஆண்டு 570 மில்லியன் டாலர் நிதி திரட்டிய இந்த நிறுவனம் 200 நகரங்களில் தனது இயக்கத்தை தொடங்க திட்டமிட்டிருந்தது.

இதையும் படிங்க: முகேஷ் அம்பானியின் மகனுக்காக துபாயில் வாங்கப்பட்ட பிரமாண்ட வீடு!

ஆனால், வருவாய் பற்றாக்குறை மற்றும் அதிக செலவினங்கள் காரணமாக களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தற்போது 90 சதவீத இயக்கத்தை மீஷோ மூடியுள்ளது. ஆறு மாநிலங்களிலும் ஒழுங்கான திட்டமிடல் இன்றி கடைகள் தொடங்கப்பட்டாதவும், சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸில் நிறுவனம் முறையாக செயல்படாமல் நஷ்டத்தை சந்திதத்தாவும் நிறுவனத்தில் பணி புரிந்து ஊழியர்கள் தரப்பு கூறுகிறது.

பணியிழந்த ஊழியர்களுக்கு 2 மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. சில ஊழியர்களை வேறு துறைக்கு மாற்றி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஏற்கனவே முதல் கோவிட் அலை காலத்தில் இந்த நிறுவனம் 200 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Business, Online shopping, Shutdown