ஹோம் /நியூஸ் /வணிகம் /

தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்!

தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஊழியர்களுக்கு மீஷோ நிறுவனம் தொடர் விடுமுறை அளிப்பது இது இரண்டாம் முறையாகும். ஊழியர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் அவர்கள் தங்கள் புதுப்பித்துக் கொள்ளவும், மறுகட்டமைப்பு செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மீஷோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Bangalore [Bangalore], India

  மாதசம்பளத்திற்கு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கு கேஷுவல் லீவ், மெடிக்கல் லீவ் என எத்தனையோ விதமான விடுமுறைகள் விதிமுறையின்படி பட்டியலில் இருக்கும். ஆனால், எல்லா விடுமுறைகளையும் நீங்கள் எப்போதாவது முழுமையாக எடுக்க முடிந்துள்ளதா? நிச்சயமாக இருக்க முடியாது.

  ஏனென்றால், நாம் கேட்கும் சமயத்தில் எல்லாம் விடுமுறை கொடுத்துக் கொண்டே இருந்தால் நிறுவனத்தின் வேலைகள் பாதிக்கப்படும். அதே வேளை, நாம் கேட்காமலேயே நமக்கு தாமாக கிடைக்கின்ற விடுமுறை என்பது பொது விடுமுறை நாட்கள்தான். அதாவது தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் பொது விடுமுறை கேட்கும்.

  இதில், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசாங்கம் வரையறை செய்துள்ள பொது விடுமுறை நாட்களில் மட்டும்தான் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்குமே தவிர, வேறு நாட்களில் அதனை எதிர்பார்க்க முடியாது.

  தொடர் விடுமுறை அளித்துள்ள மீஷோ நிறுவனம்

  வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட கால விடுமுறை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மீஷோ நிறுவனம். அதுவும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் அனைவரும் செம்ம குஷியில் உள்ளனர்.

  வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களுக்கு மன ரீதியாக புத்துணர்ச்சி கிடைக்க இந்த விடுமுறை உதவும் என்று மீஷோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

  விடுமுறை என்று பெயருக்கு அறிவித்துவிட்டு, சில முக்கிய பணிகளை வீட்டில் இருந்தே செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல், இந்த 11 நாட்களிலும் ஊழியர்கள் முழுமையாக தங்கள் வேலைகளை ஒத்திவைத்துவிட்டு புத்துணர்ச்சி அடையலாம் என்று மீஷோ நிறுவனம் கூறியுள்ளது.

  இப்படி விடுமுறை அளிப்பது இரண்டாவது முறை

  ஊழியர்களுக்கு மீஷோ நிறுவனம் தொடர் விடுமுறை அளிப்பது இரண்டாம் முறையாகும். ஊழியர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் அவர்கள் தங்கள் புதுப்பித்துக் கொள்ளவும், மறுகட்டமைப்பு செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மீஷோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  முன்னுதாரண நடவடிக்கைகள்

  ஊழியர் நலனுக்காக சூப்பரான நடவடிக்கைகள் பலவற்றை மீஷோ நிறுவனம் ஏற்கனவே செய்திருக்கிறது. புதிதாக குழந்தை பிறந்தால், பெற்றோர் என்ற அடிப்படையில் அந்த ஊழியர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 30 வாரங்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

  Read More: கூகுள் நிறுவனத்துக்கு அரசிடம் இருந்து நெருக்கடி - காரணம் இது தான்!

  முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் சுதந்திரமான பணிக்கொள்கை ஒன்றை மீஷோ செயல்படுத்தியது. அதாவது, வீடு, அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் ஒரு இடம் என ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களில் இருந்து பணி செய்யலாம் என்று சலுகை அளிக்கப்பட்டது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Corporate, Meesho App, Office