ஹோம் /நியூஸ் /வணிகம் /

மன நலப் பிரச்சனைகளுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸில் கவரேஜ் உண்டா? விடை இங்கே!

மன நலப் பிரச்சனைகளுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸில் கவரேஜ் உண்டா? விடை இங்கே!

மெடிகல் இன்ஷூரன்ஸ்

மெடிகல் இன்ஷூரன்ஸ்

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால் மட்டும் தான் காப்பீட்டில் கவரேஜ் பெற முடியும் என்ற ஒரு விதிமுறை இருக்கின்றது.

 • Trending Desk
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மருத்துவ காப்பீடு என்று வரும் பொழுது ஜெனரல் ஹெல்த் பாலிசி என்று, சாதாரண மருத்துவ காப்பீடாக, குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ காப்பீடு, அறுவை சிகிச்சைகளுக்கான காப்பீடு என்று பல விதமான காப்பீடுகள் இருக்கின்றன. இருப்பினும், மனநல பாதிப்புகளை பொறுத்தவரை அவை மருத்துவ காப்பீட்டில் கவரேஜ் செய்யப்படுகிறதா அல்லது எந்த விதமான பிரச்சனைகளுக்கு மருத்துவ காப்பீட்டில் கிளைம் பெறமுடியும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது!

  மன நல பாதிப்பு என்பது பேசினாலே பைத்தியம் என்று கூறிவிடுவார்களோ என்று பயந்த  காலம் எல்லாம் மாறிவிட்டது. தொடர்ச்சியான மன நல பாதிப்புகள் தான் உடலில் தீவிரமாக வெளிப்படுகின்றன. எனவே, உங்களுடைய மருத்துவக் காப்பீட்டில் எந்தவிதமான மன நோய்களுக்கு அல்லது மனநல பிரச்சினைகளுக்கு கவரேஜ் வழங்கப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  மன நல பாதிப்புகளுக்கு மருத்துவக் காப்பீடு ஏன் முக்கியம்?

  வாழ்க்கை முறை மாற்றத்தால் பலரும் தீவிரமான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் தொற்றுக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டாண்டு கால ஊரடங்கில் மன அழுத்தம் மற்றும் பாதிப்புகள் கணிசமான எண்ணிக்கையில் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. மனநல பாதிப்பு என்பது மற்றவருக்கு நடப்பதில்லை நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்ற அளவுக்கு அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிப்பு அடைந்துள்ளனர்.

  டென்ஷனை விடுங்க.. தவறான அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்பினால் திரும்ப பெறுவது ஈஸி!

  உலகம் முழுவதிலுமே படபடப்பு, மனப்பதட்டம் மற்றும் டிப்ரெஷன் எனப்படும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது என்று கடந்த மார்ச் மாதம் உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், கிட்டத்தட்ட பத்துக் கோடிக்கும் மேற்பட்டவர்கள் மெண்டல் டிஸ்-ஆர்டர் என்று கூறப்படும் பலவிதமான மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் வேலை பார்க்கும் அடல்ட் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 15 சதவிகிதத்தினர் ஏதேனும் ஒருவகையான மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதனால் தான், உலக மனநல நாள் அன்று மனநலம் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருப்பொருளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

  உடல்நலம் என்பது போலவே மனநலமும் மிகவும் முக்கியம். அதனால்தான் விபத்து அல்லது ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் அதற்கு எவ்வாறு மருத்துவ காப்பீடு உதவுகிறதோ அதேபோல மனநல பாதிப்புகளுக்கு மருத்துவ காப்பீடு உதவியாக இருக்கும்.

  மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை ப்ராடக்ட் அதிகாரி நிகில் ஆப்தே இதைப் பற்றி கூறுகையில் “கோவிட் தாக்கத்தின் பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் பலரும் மனநல பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். ஆனால் முன்பு போல மறைமுகமாக அல்லாமல், தற்போது கவுன்சிலிங் எடுத்துக் கொள்கிறார்கள், ஆண்டி-டிப்ரஷன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள்;

  இதைப் பற்றி வெளிப்படையாக கூறாமல் இருந்தவர்கள் கூட, சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கிறார்கள். எனவே இன்சூரன்ஸ் நிறுவனங்களை பொறுத்தவரை இது ஒரு பிரச்சனையாக கருதப்படவில்லை. அது மட்டுமில்லாமல் இத்தகைய சிகிச்சை பெறுபவர்களை ஒதுக்கி வைப்பதோ அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது இப்பொழுது இல்லை” என்பதை உறுதி செய்துள்ளார்.

  மன நல சிகிச்சைகளுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ்

  IRDAI, உடல் ரீதியான கோளாறுகளுக்கு சமமாக மன நோய்கள் மற்றும் பாதிப்புகளை இன்ஷூரன்ஸ் வழியே சிகிச்சை பெற உதவும் படி, மன நலம் பராமரிப்பு சட்டம் 2017 இல் இயற்றப்பட்டு, 2018 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டுவந்தது. எவ்வாறு உடல் ரீதியான நோய்களுக்கு மருத்துவக் காப்பீடு வழியாக சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதோ, அதுபோல மன ரீதியான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

  இன்றுடன் முடிவடைகிறது.. இனி ஐசிஐசிஐ வங்கியில் இந்த சேமிப்பு திட்டம் கிடையாது!

  ஆனால் மன அழுத்தம் அல்லது நீண்ட கால தூக்கமின்மை, மனப்பதற்றம், என்று ஒரு சில பிரச்சனைகளுக்கான சிகிச்சை என்பது பெரும்பாலும் அவுட் பேஷன்ட் அதாவது வெளி நோயாளியாகவே வழங்கப்படுகிறது. உதாரணமாக கவுன்சிலிங். இத்தகைய சிகிச்சைகளுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவைப்படுவதில்லை.

  பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ காப்பீட்டில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால் மட்டும் தான் காப்பீட்டில் கவரேஜ் பெற முடியும் என்ற ஒரு விதிமுறை இருக்கின்றது. இது விபத்து, உடல்ரீதியான பிரச்சனைகளுக்கும் பொருந்தும். எனவே, வெளி நோயாளியாக கவுன்சிலிங் பெறுபவர்கள் அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், ஆகியவர்களுக்கு மனநல சிகிச்சைக்கான செலவுகளை காப்பீட்டில் கிளைம் செய்ய முடியாது.

  ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அண்டர் ரைட்டிங், கிளைம் மற்றும் மறுகாப்பீட்டு திட்டப் பிரிவின் தலைவரான சஞ்சய் தத்தா, “நீங்கள் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சென்று மன நலத்துக்கான சிகிச்சைகளை பெற முடியும். ஆனால் ஒரு சில மருத்துவமனைகள் மட்டும் தான் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை வழங்குகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

  மனநல சிகிச்சை செலவுகளை காப்பீட்டில் கிளைம் செய்ய முடியாதா?

  உங்களுடைய மருத்துவ காப்பீட்டில் வெளி நோயாளியாக நீங்கள் பெறும் சிகிச்சைகள் கவரேஜில் சேர்க்கப்பட்டு இருந்தால், நீங்கள் மனநல பிரச்சனைகளுக்கான சிகிச்சைகளுக்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்களோ அதை கிளைம் செய்ய முடியும். உதாரணமாக வெளி நோயாளியாக நீங்கள் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைகளில், மருத்துவருடைய கன்சல்டேஷன் பீஸ், மருந்துகள், பரிசோதனைகள் கட்டணம் ஆகியவை அடங்கும்.

  மன நலப் பிரச்சனை இருக்கிறது என்று உங்கள் காப்பீட்டை ரத்து செய்ய முடியாது

  உங்களுக்கு மன நல பாதிப்பு இருக்கிறது என்ற காரணத்திற்காக எந்த காப்பீட்டு நிறுவனமும் உங்களுடைய கோரிக்கையை ரத்து செய்ய முடியாது. ஆனால் நீங்கள் புதிதாக ஒரு காப்பீடு வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற அடிப்படையில் மருத்துவ காப்பீட்டை உங்களுக்கு வழங்காமல் மறுப்பதற்கு உரிமை இருக்கிறது. உடல் நலத்திற்கு அல்லது விபத்து அல்லது ஏதேனும் நோய்க்கு எவ்வாறு மருத்துவ காப்பீடு வழங்காமல் மறுக்க காரணம் இருக்கின்றதோ, அதே போல, மன நல காப்பீட்டையும் மறுக்கலாம்.

  எனவே, காப்பீட்டை பெறும் போது, எவ்வாறு உடல் நல பிரச்சனைகளைப் பற்றி விவரமாக கூற வேண்டுமோ, அதே போல, ஸ்ட்ரெஸ், படபடப்பு உள்ளிட்ட என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதைப்பற்றி கூற வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Health Checkup, Insurance