ஹோம் /நியூஸ் /வணிகம் /

இந்த காரணங்களால் உங்கள் மருத்துவ காப்பீடு கிளைம் நிராகரிக்கப்படும் – அதைத் தவிர்ப்பது எப்படி?

இந்த காரணங்களால் உங்கள் மருத்துவ காப்பீடு கிளைம் நிராகரிக்கப்படும் – அதைத் தவிர்ப்பது எப்படி?

மருத்துவ காப்பீடு கிளைம் நிராகரிக்கப்படும் காரணங்கள்.

மருத்துவ காப்பீடு கிளைம் நிராகரிக்கப்படும் காரணங்கள்.

தனிநபர் மருத்துவ காப்பீடு திட்டம் ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்படலாம். அவை எதற்காக என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எதிர்பாராமல் ஏற்படக்கூடிய மருத்துவச் செலவுகள், சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிப்பதற்கு மருத்துவ காப்பீடுகள் மிகப்பெரிய அளவுக்கு உதவியாக இருக்கும். அவசர சிகிச்சைக்கு மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் பணமில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடியும் அல்லது மருத்துவச் சிகிச்சைக்குச் செலவு செய்த பணத்தை கிளைம் மூலமாக மீண்டும் திரும்பப் பெற முடியும். ஆனால், ஒரு சில நேரத்தில் உங்களுடைய மருத்துவக் காப்பீட்டு கிளைம்கள் நிராகரிக்கப்படலாம். எந்தெந்த காரணங்களால் உங்களுடைய கிளைம் ரத்து செய்யப்படும் மற்றும் அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணமில்லாமல் சிகிச்சை பெறும் விருப்பம் இருந்தும் நிராகரிக்கப்படும் காரணங்கள் :

நீங்கள் எந்த நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு வாங்கி இருக்கிறீர்களோ அந்த நிறுவனம் ஒரு சில மருத்துவமனைகளுடன் சேவை வழங்குவதில் இணைந்திருக்கும். பணமில்லாமல் சிகிச்சை பெறுவதற்கு உங்கள் மருத்துவ காப்பீட்டு வெளியிட்டிருக்கும் பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் தான் உங்களால் சிகிச்சை பெற முடியும். ஒருவேளை நீங்கள் சிகிச்சை பெறவிருக்கும் மருத்துவமனையின் பெயர், காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் இல்லை என்றால், உங்களுக்கு கேஷ்லெஸ் சிகிச்சை பெற முடியாது.

முன்கூட்டியே திட்டமிடவில்லை :

ஒரு சில சிகிச்சைகள், உதாரணமாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். உங்களுடைய மருத்துவ காப்பீட்டில் பணமில்லாமல் சிகிச்சை பெறும் விருப்பம் இருக்கும் பொழுது நீங்கள் காப்பீட்டைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைச் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு மற்றும் உங்களுடைய மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். எனவே இத்தகைய சூழலில் உங்களால் முன்கூட்டியே அறிவிக்க முடியாவிட்டால், முதலில் பணம் செலுத்தி அதற்குப் பின்னர் தான், கிளைம் செய்து செலவுகளை மீண்டும் பெற முடியும்.

பொதுவாக வேறு என்ன காரணங்களுக்காக கிளைம்கள் மறுக்கப்படுகின்றன?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான செலவுகளை மருத்துவ காப்பீட்டு வழியாக நீங்கள் கிளைம் செய்து பெற வேண்டும் என்று விரும்பினால், அதற்குக் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்காவது நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருக்க வேண்டும். அதற்கும் குறைவான காலமென்றால் கிளைம் நிராகரிக்கப்படும்.

பாலிசி எடுத்த பிறகு, வெயிட்டிங் பீரியட் என்று குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் காப்பீட்டைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அந்த காலத்தில் உங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு கிளைம் செய்ய முடியாது.

வெளி நோயாளியாகப் பெறும் சிகிச்சைகளுக்கு கிளைம் ரத்து செய்யப்படும். உதாரணமாக, காஸ்மெட்டிக் சிகிச்சைகள், பல் சிகிச்சைகள், கண்களுக்கான சிகிச்சை போன்றவை.

ஏதேனும் ஒரு விஷயத்தை மறைத்து அல்லது பொய்யாகக் கூறி நீங்கள் மருத்துவக் காப்பீட்டைப் பெற்றிருந்தால், அது கண்டறியப்படும் போது, கிளைம் நிராகரிக்கப்படும். உதாரணமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு நோய் இருந்து, அதை நீங்கள் மறைத்து அல்லது கூறாமல் விட்டு காப்பீடு பெற்றிருந்தால், அதற்கான சிகிச்சைக்கு கிளைம் கிடைக்காது.

நீங்கள் மருத்துவ காப்பீடு வாங்கும் பொழுதே அதில் எந்தெந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு கவரேஜ் வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் காப்பீடு வாங்கிய பிறகு உங்களுக்கு வேறு நோய் அல்லது குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைக்குக் காப்பீட்டில் நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

Also Read : Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இதோ..!

உங்களுடைய மருத்துவ காப்பீட்டிற்கான கிளைம் நிராகரிக்கப்படக்கூடாது என்றால் நீங்கள் எந்த நோய்களுக்கெல்லாம் சிகிச்சை பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனையுமே உங்களுடைய காப்பீட்டில் கவரேஜ் பெறுவது போல நீங்கள் காப்பீட்டைப் பெற வேண்டும்.

அது மட்டுமல்லாமல், மருத்துவ காப்பீடு பெறும் போது எந்த தகவலையும் மறைக்காமல் அல்லது தவிர்க்காமல் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். புதியதாக ஏதாவது நோய் கண்டறியப்பட்டால், கூடுதலான ரைடர் திட்டங்களில் கூடுதல் பிரீமியம் செலுத்தி அதற்கும் நீங்கள் காப்பீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

Published by:Janvi
First published:

Tags: Insurance, Medical Emergency