முகப்பு /செய்தி /வணிகம் / மே மாத பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்!

மே மாத பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்!

வங்கி விடுமுறை நாட்கள்

வங்கி விடுமுறை நாட்கள்

Bank Holiday : மே மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்..

ஆண்டின் 5வது மாதமாக மே மாதம் உள்ளது. 31 நாட்களைக் கொண்ட 7 பெரிய மாதங்களில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதமே விடுமுறை மாதமாகத் தான் இருக்கும். அதே சமயம், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை, பணி நாட்கள் தொடர்புடைய விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படும்.

பொதுவாக ஒரு ஆண்டில் எந்த மாதத்திற்கும் கிடைக்காத சிறப்பு மே மாதத்திற்கு உண்டு. அதுதான் உழைப்பாளர் தினம். உழைக்கும் மக்கள் அனைவரியும் கௌரவிக்கும் தினமாகவும், அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மே 1ஆம் தேதிதான் எப்போதுமே உழைப்பாளர் தினம் என்பதும், அன்றைய தினம் பொது விடுமுறை என்பதும் நாம் அறிந்த செய்திதான். ஆனால், இந்த ஆண்டு இது ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. வார நாட்களில் வந்திருந்தால் பணியாளர்களுக்கு மற்றுமொரு விடுமுறை நாள் கிடைத்திருக்கும்.

அடுத்ததாக முஸ்லிம் மக்களின் பிரதான பண்டிகையான ரம்ஜான் இந்த ஆண்டு மே மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மே 3ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு பொது விடுமுறை என்றாலும் கூட, பிறை தெரிவதைப் பொறுத்து முஸ்லிம் மக்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடும் நேரம் மாறுபடக் கூடும்.

also read : பெர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டு - எது உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்?

வங்கி விடுமுறைகள்:

மேற்கண்ட இரண்டு பொது விடுமுறை தினங்களிலும் வங்கிகள் இயங்காது என்பதோடு, மேலும் சில தினங்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினம் வருகிறது. ஆண்டின் தொடக்கத்திலேயே வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி பட்டியலிட்டு விடுகிறது. அதே சமயம், ஒவ்வொரு மாநிலம் அல்லது இனம் சார்ந்த பண்டிகைகளுக்காகவும் தொடர்புடைய பகுதிகளில் மட்டும் வங்கி விடுமுறை அளிக்கப்படுகிறது.

மே 1 - ஞாயிற்றுக்கிழமை - உழைப்பாளர் தினத்தை ஒட்டி நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

மே 2 - திங்கள்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மட்டும்.

மே 3 - செவ்வாய்க்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கொச்சி, திருவனந்தபுரம் தவிர்த்து நாடு முழுவதிலும் விடுமுறை ஆகும்.

மே 8 - ஞாயிற்றுக்கிழமை - நாடெங்கிலும் வார இறுதி விடுமுறை ஆகும்.

also read : புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளது?

மே 9 - திங்கள்கிழமை - ரவீந்திரநாத் தாக்கூர் பிறந்தநாள் விழா - மேற்கு வங்கம் மட்டும்.

மே 14 - சனிக்கிழமை - இரண்டாம் சனிக்கிழமை அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

மே 15 - ஞாயிற்றுக்கிழமை - வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.

மே 16 - திங்கள்கிழமை - புத்த பூர்ணிமா - நாட்டின் ஒரு சில பகுதிகளில் விடுமுறை.

மே 22 - ஞாயிற்றுக்கிழமை - வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் விடுமுறை ஆகும்.

மே 28 - சனிக்கிழமை - நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

மே 29 - ஞாயிற்றுக்கிழமை - நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

First published:

Tags: Bank holiday