Home /News /business /

கிரெடிட்/டெபிட் கார்டுகளின் ‘ஆட்டோ பில்லிங்’ முறைக்குச் செக்; மாஸ்டர் கார்டு அதிரடி!

கிரெடிட்/டெபிட் கார்டுகளின் ‘ஆட்டோ பில்லிங்’ முறைக்குச் செக்; மாஸ்டர் கார்டு அதிரடி!

மாஸ்டர் கார்

மாஸ்டர் கார்

பிற கார்டு நிறுவனங்களும் விரைவில் இப்படிக் கொள்கை மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    இணையதள உலகில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் உட்படப் பல ஆன்லைன் சேவைகளின் சோதனை ஓட்டத்தை 30 நாட்கள் வரை இலவசமாகப் பெற முடியும். ஆனால் சோதனை ஓட்டத்தைத் தொடங்கும் போது டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்களை அளிக்க வேண்டியதும் கட்டாயமாக உள்ளது.

    இப்படிக் கார்டு விவரங்களை அளித்துச் சோதனை சேவையைப் பெற்ற பிறகு, அது முடிந்த உடன் சம்மந்தப்பட்ட நிறுவனம் வாடிக்கையாளர்களின் அனுமதியில்லாமல் கார்டு மூலமாக வங்கி கணக்கிலிருந்து பணத்தைப் பிடித்துவிடுகின்றன. இது குறித்துத் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்குச் செக் வைக்கும் விதமாக மாஸ்டர் கார்டு நிறுவனம் இணையதளச் சோதனை சேவைகள் முடிந்த பிறகு ‘அட்டோ பில்லிங்’ கீழ் பணத்தைப் பெறும் கொள்கைகளில் திருத்தம் செய்துள்ளது.

    எனவே புதிய கொள்கை மாற்றங்களின் படி, சோதனை சேவை முடிவுக்கு வந்த பிறகு அதிகாரப்பூர்வமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சம்மந்தப்பட்ட நிறுவனம் அனுமதி பெற்றபின்தான் வங்கி கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்ய முடியும்.

    மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சேவை பெறுவதற்கான ரசீதுகளை அனுப்ப வேண்டும். அதில் சந்தாவை ரத்துச் செய்வது எப்படி என்றும் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும் என மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தச் சேவை தற்போது மாஸ்டர் டெபிட்/ கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பிற கார்டு நிறுவனங்களும் விரைவில் இப்படிக் கொள்கை மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது.

    மேலும் படிக்க: இலவச திட்டங்கள்... மக்கள் நலனா? வாக்கு வங்கியா?
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Master Card

    அடுத்த செய்தி