Home /News /business /

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டை செய்யும் மாஸ்டர் கார்டு!

இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டை செய்யும் மாஸ்டர் கார்டு!

மாஸ்டர் கார்

மாஸ்டர் கார்

இந்திய ரிசர்வ் வங்கி பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்கள் அது குறித்த தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சர்வதேச டெபிட்/கிரெடிட் கார்டு நிறுவனமான மாஸ்டர் கார்டு இந்தியாவில் அடுத்த 5 ஆண்டில் 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்கள், அது குறித்த தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாஸ்டர் கார்டு, இந்தியாவிலேயே தரவுகளைச் சேமிக்க வேண்டும் என்றால் பாதுகாப்பு குறைப்பபாடுகள் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எனவே இந்த உத்தரவை ஆர்பிஐ திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த ஆர்பிஐ, கண்டிப்பாக இந்தியாவில் மட்டும் தான் தரவுகளைச் சேமிக்க வேண்டும் என்று கூறியது.

எனவே புனேவில் இந்தியாவிற்கான கிரெடிட்/டெபிட் கார்டுகள் பரிவர்த்தனை தரவுகளைச் சேமிக்கும் மையத்தை அமைக்கும் வேலையில் மாஸ்டர் கார்டு இறங்கியுள்ளது.

மேலும் 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 7,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளோம். அதில் சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கைப்பற்றுவது, குர்காம், வடோத்ரா மற்றும் புனேவில் தொழில்நுட்ப மையங்களை அமைப்பது போன்றவை இருக்கும் என்று மாஸ்டர் கார்டு தெரிவித்துள்ளது.

மாஸ்டர் கார்டுக்கு அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா தான் இரண்டாம் மிகப் பெரிய சந்தையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Master Card

அடுத்த செய்தி