மாருதி சுசூகி 4-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு; லாபம் ரூ.1,795 கோடி சரிவு!

மாருதி சுசூகி

சென்ற ஆண்டைப் போன்றே 2018-2019 நிதியாண்டிலும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 80 ரூபாய் விதம் டிவிடண்ட் அளிக்க உள்ளதாகவும் மாருதி அறிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி 2018-2019 நிதியாண்டின் 4-ம் காலாண்டின் லாபம் 1,795 கோடி ரூபாய் சரிந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

  மாருதி சுசூகியின் ஆண்டு வருவாய் 1.4 சதவீதம் வளர்ச்சியுடன் 21,459.4 கோடி ரூபாயாக உள்ளது.

  2018-2019 நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் மாருதி சுசூகி 4,58,479 வாகனங்களை விற்றுள்ளது. அதில் உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை 4,21,383 என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. இலகு ரக வாகன பிரிவில் 7,480 வாகனங்களை மாருதி விற்றுள்ளது. ஏற்றுமதியில் 29,616 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது.

  சென்ற ஆண்டைப் போன்றே 2018-2019 நிதியாண்டிலும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 80 ரூபாய் விதம் டிவிடண்ட் அளிக்க உள்ளதாகவும் மாருதி அறிவித்துள்ளது.

  சென்ற நிதியாண்டில் அந்நிய செலாவணி விகிதங்களில் நிலைதன்மையில்லாதது மற்றும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை மிகவும் சவலாக இருந்தது. இதுவே லாபம் குறைந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் மாருதி சுசூகி குறிப்பிட்டு இருந்தது.

  4-ம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து சந்தை நேர முடிவில் மாருதி சுசூகி பங்கின் மதிப்பு 2.23 சதவீதம் சரிந்து 6,868.05 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: