Home /News /business /

சென்செக்ஸ் 1,422 புள்ளிகளும், நிஃப்டி 11,828 புள்ளிகளாகவும் உயர்வு!

சென்செக்ஸ் 1,422 புள்ளிகளும், நிஃப்டி 11,828 புள்ளிகளாகவும் உயர்வு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இன்றைய சந்தை நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3.75 சதவீதம் உயர்ந்து 39,352.67 புள்ளிகளாகவும், நிஃப்டி 3.69 சதவீதம் உயர்ந்து 11,828.25 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    2019 மக்களவைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தை அடுத்து வெளியான கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வந்தது. எனவே பங்குச்சந்தை இன்று காலை முதலே உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.

    பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள் பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

    2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளின் போது கூட பாஜக முன்னிலை வகிக்கும் போது சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை சரிந்தது. ஆனால் அடுத்த 5 வருட ஆட்சிக் காலத்தில் பங்குச்சந்தை 12,000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    தற்போது பாஜக ஆட்சியே தொடரும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்படுவதால் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் உள்ளது. இதுவே தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தால் பங்குச்சந்தை சரியும்.

    இது ஒவ்வொரு முறை தேர்தல் முடிவுகள் வரும்போதும் நடைபெறும் மாற்றங்களே தவிர வேறு இல்லை.

    இன்றைய சந்தை நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3.75 சதவீதம் உயர்ந்து 39,352.67 புள்ளிகளாகவும், நிஃப்டி 3.69 சதவீதம் உயர்ந்து 11,828.25 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

    துறைவாரியான நிலவரத்தைப் பார்க்கும் போது ஐ.டி., மற்றும் டெக் துறை பங்குகளைத் தவிரக் கட்டுமானம், ரியாலிட்டி, மெட்டல், ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், ஆட்டோமொபைல், அங்கி, நிதி டெலிகாம், எனா அனைத்துத் துறைகளும் லாபத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டிருந்தன.

    லாபம் அளித்த டாப் 5 பங்குகள்:


    இண்டஸ் இண்ட் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, எல்&டி

    நட்டம் அளித்த பங்குகள்:


    இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ

    ரூபாய் மதிப்பு:


    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 60 பைசா உயர்ந்து 69.92 ரூபாயாக உள்ளது. இதுவே ஐ.டி. பங்குகள் சரிவுக்கான காரணமாக உள்ளது.

    கச்சா எண்ணெய்:


    சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.57 சதவீதம் குறைந்து பேரல் 72.21 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 0.18 சதவீதம் குறைந்து 62.76 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Nifty, Sensex, Stock market

    அடுத்த செய்தி