ஐந்து நாட்கள் உயர்வுக்குப் பிறகு சரிந்த சென்செக்ஸ்!

சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 4.14 புள்ளிகள் சரிந்து 36,971.09 ரூபாயாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 6.95 புள்ளிகள் உயர்ந்து 11,069.40 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

news18
Updated: February 7, 2019, 5:11 PM IST
ஐந்து நாட்கள் உயர்வுக்குப் பிறகு சரிந்த சென்செக்ஸ்!
மாதிரிப் படம்
news18
Updated: February 7, 2019, 5:11 PM IST
பங்குச்சந்தை தொடர்ந்து 5 நாட்களாக உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து 6-வது நாளான இன்று சென்செக்ஸ் சரிந்தும், நிஃபிடி ஃபிளாட்டாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 4.14 புள்ளிகள் சரிந்து 36,971.09 ரூபாயாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 6.95 புள்ளிகள் உயர்ந்து 11,069.40 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் டெலிகாம், ஆட்டோமொபைல், தொழிற்சாலை, டெக், கட்டுமானம், நிதி, வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் ரியாலிட்டி, மெட்டல், மின்சாரம், ஆற்றல் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.

லாபம் அளித்த டாப் 5 பங்குகள்:

சன் பார்மா, பஜாஜ் ஆட்டோமொபைல், டாடா மோட்டார்ஸ், ஹோரோ மோட்டோ கார்ப், கோல் இந்தியா.

நட்டம் அளித்த 5 பங்குகள்:

ரிலையன்ஸ், பவர் கிரிட், எச்டிஎஃப்சி, எல்&டி, இண்டஸ் இண்ட் வங்கி.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்:

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.13 சதவீதம் உயர்ந்து பேரல் 62.69 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 0.65 சதவீதம் உயர்ந்து பேரல் 54.01 டாலராகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...