Home /News /business /

ஃபேஸ்புக் பயனர்களின் விவரங்களை மார்க் தான் விற்றாரா?

ஃபேஸ்புக் பயனர்களின் விவரங்களை மார்க் தான் விற்றாரா?

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

ஃபேஸ்புக் பங்குகள் ஒரு பக்கம் சரிய, அமெரிக்க நீதிமன்றம் கூகுள், டிவிட்டர் போன்ற பிற சமுக வலைதளங்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது.

  • News18
  • Last Updated :
    சமுக வலைதளமான ஃபேஸ்புக், தனது பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை மார்க் சக்கர்பர்க் தலைமையில்தான் விற்பனை செய்தது என என்பிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    2011-2015 கால கட்டங்களில் ஃபேஸ்புக் நிறுவனர் தலைமையில் 100 ஆப் டெவலப்பர்களுக்கு ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விற்பனை செய்ததாக என்பிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரம் செய்பவர்களுக்கும் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை விற்க முடிவு செய்யப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    சென்ற வருடம் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா துணையுடன் அரசியல் கட்சிகளுக்கு ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்றதாக செய்தி வெளியிடப்பட்டது.

    முதலில் ஃபேஸ்புக் இதை மறுத்தது. ஆனால் பிரிச்னை பூதாகரமாக வெடிக்க, மார்க் சக்கர்பெர்க் ஆம், ஃபேஸ்புக் பயனர்கள் தரவுகள் விற்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதில் எனக்குத் தொடர்பு இல்லை என்று கூறி வந்தார். மேலும் இதை ஃபேஸ்புக் மட்டும் செய்யவில்லை. கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களும் தான் செய்கின்றன என்று குண்டைத் தூக்கிப்போட்டார்.

    உடனே ஃபேஸ்புக் பங்குகள் ஒரு பக்கம் சரிய, அமெரிக்க நீதிமன்றம் கூகுள், ட்விட்டர் போன்ற பிற சமுக வலைதளங்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது.

    மறுபக்கம் ஃபேஸ்புக் தங்களது பயனர்களின் தனிப்பட்ட விவரங்களின் பாதுகப்பை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

    இந்நிலையில் ஃபேஸ்புக்கில் நடைபெற்ற பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் விற்பனை, மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் தான் நடைபெற்றது என்று 4000 பக்கத்திற்கு லீக்கான ஆவணங்களில் உள்ளதாக என்பிசி அறிக்கை வெளியிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Facebook, Mark zuckerberg

    அடுத்த செய்தி