டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய இரண்டே வாரங்களில் அந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் அதிரடியான நடவடிக்கைகள் பலவற்றை நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், டிவிட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்தவருமான பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தலைமைப் பொறுப்பில் இருந்த அவருக்கே இந்த நிலைமை என்றால், அடுத்தடுத்த நிலைகளில் பணியாற்றிய ஊழியர்கள் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உதாரணத்திற்கு அமெரிக்க பெண் ஊழியர் ஒருவருக்கு, பணிநீக்க அறிவிப்பு இமெயிலில் காலையில் வருவதற்கு முன்பாக முதல் நாள் இரவே, அவரது அலுவலக லேப்டாப் லாக் செய்யப்பட்டது.
இந்தியர்கள் உள்பட பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களது வாழ்வாதாரம் கேள்வியாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, டிவிட்டரில் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லையாம்!
20 மணி நேரத்திற்கு மேலாக வேலை
திடீரென்று பணியாளர்கள் குறைக்கப்பட்ட வேலையில், இருக்கும் வேலைகளை சமாளிக்க தற்போதைய ஊழியர்களுக்கு பணி நேரத்தை தாண்டியும் வேலை பிழிந்து எடுக்கிறார்களாம். சில முக்கிய பொறுப்பில் இருக்கும் மேலாளர்கள் 20 மணி நேரம் வரையிலும் கூட பணி செய்ய வேண்டியிருக்கிறது என்று டிவிட்டர் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டருக்கு மாற்றாக இணையத்தில் கிடைக்கும் டாப் 5 ஆப்ஸ்கள்!
சிலருக்கு மீண்டும் பணி?
மொத்த பணியாளர்களில் ஏறத்தாழ 50 சதவீதம் பேரை அவசர கதியில் பணிநீக்கம் செய்த நிலையில், வேலைக்கு தேவைப்படும் சில ஊழியர்கள் தவறுதலாக பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டனர் என்று டிவிட்டர் நிறுவனம் கருதுகிறதாம். இதனால், அவர்களை மீண்டும் பணிக்கு அழைக்க டிவிட்டர் நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது.
நோ சொல்லும் முன்னாள் ஊழியர்கள்
ஆனால், நிறுவனத்தில் தற்போது நிலவும் கலவர சூழலை கருத்தில் கொண்டு அங்கு மீண்டும் பணிக்கு சேரும் எண்ணமில்லை என்று முன்னாள் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், ஊழியர்கள் தாமாக முன்வந்து பணியில் சேரும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிநீக்க நோட்டீசை டிவிட்டர் நிறுவனம் ரத்து செய்யும் என்று தெரிகிறது.
ட்விட்டரில் அடுத்த அதிரடி மாற்றம் அறிமுகம்!
டிவிஸ்ட் வைக்கும் டிவிட்டர் - பணம் கிடைக்குமா?
ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது, அவர்களுக்கு 60 நாட்களுக்கான ஊதியம் மற்றும் ஒரு மாதத்திற்கான உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் என்று டிவிட்டர் உறுதி அளித்திருந்தது. அதாவது, வேலை செய்யாமலேயே 3 மாத ஊதியம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இப்போது, மீண்டும் பணியில் சேரும்படி அழைப்பு விடுத்து, அதை ஊழியர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், அவர்களாகவே பணி விலகியதாகக் கருதப்படும். இந்தச் சூழலில், அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை கிடைக்காது. ஆக, ஊழியர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IT Industry, Twitter