பஞ்சாபில் சர்தார் ஜி ஒருவர், ஒரு மஞ்சள் உணவு ட்ரக்கை இயக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகெங்கிலும் 35 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்து பணியாற்றிய இவர் இப்போது பீட்ஸா, பர்கர் என வகை வகையாக சமைத்து வெறும் 199 ரூபாய்க்கு விற்று வருகிறார்.
பஞ்சாப்பை சேர்ந்தவர் மொஹபத் தீப் சிங். தொழில்நுட்பத்துறையில் பட்டம் பெற்று, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், விப்ரோ, டெல் மற்றும் பார்க்லேஸ் போன்ற சுமார் 6 உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனத்தில் ₹5000க்கு பணியில் சேர்ந்து ₹1.5 லட்சம் சம்பளம் வாங்கும் மேலாளராக உயர்ந்துள்ளார். டென்மார்க், நோர்வே மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்துள்ள இவர் இறுதியாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் பணியாற்றியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்து பஞ்சாப் அருகே உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்க முடிவு செய்தார். டெல்லியை போல் அவர் வசித்த தில்வான் பகுதியில் உணவு ட்ரக்குகள் எதுவும் இல்லை என்பதை சர்தார் ஜி உணர்ந்தார். எனவே, அவர் அங்கு ‘தி பீட்சா தொழிற்சாலை’யைத் தொடங்க முடிவு செய்தார்.
பஞ்சாபில் இருந்து அம்ரிஸ்டர் செல்லும் வழியில் தில்வான் டோல் பிளாசா உள்ளது. தில்வான் டோல் பிளாசாவுக்கு அருகில் ஒரு மஞ்சள் ட்ரக்கை சமையலறையாக மாற்றி, தி பீட்சா ஃபேக்டரி என்ற பெயரில் தனது சொந்த உணவு வியாபாரத்தை நடத்தி வருகிறார்.
இது கதவா ? காரா?.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வைரல் வீடியோ.!
உணவு டிரக்கில் பீஸ்ஸாக்கள், பாஸ்தா, பர்கர்கள், ரேப்கள் மற்றும் பிற தின்பண்டங்களை தயாரித்து வருகின்றார். உணவு வீண் விரயம் செய்தல் கூடாது.பேக்கிங் இல்லை என்ற நிபந்தனையின் பேரில் வரம்பற்ற பீட்சாக்களை ஒரு நபருக்கு ₹199க்கு என்று விற்கிறார்.
டெல்லியும் ஹரியானாவும் கான்கிரீட் காடுகள் போன்றது. ஆனால் இங்கு ராஜஸ்தானில் சொந்த ஊரில் வாழ்வதை சுகம் என்று நினைக்கிறேன். வீட்டிற்கு ஒரே பையனான நான் இறுதிக்காலத்தில் இருக்கும் அம்மா அப்பாவை இங்கேயே உடன் இருந்து பார்த்துகொல்வதைக் கடமை என நினைக்கிறன். இப்போது தான் என் வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன் என்கிறார் சிங்.
தனது வேலையைச் செய்யும் போது, அவர் ஒரு மன நிறைவு அடைவதாகவும், இதே போல இன்னும் பெரிய அளவில் தனது சொந்த கடைகளைத் தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். எனவே, நீங்கள் ராஜஸ்தான் அம்ரிஸ்டர் வழியில் செல்கிறீர்கள் என்றால், சர்தார் ஜியின் உணவு டிரக்கில் நின்று சுவையான பீஸ்ஸாக்களை சாப்பிட மறக்காதீர்கள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.