ஹோம் /நியூஸ் /வணிகம் /

PF Balance : பிஎஃப் இருப்பை சரிபார்த்த நபருக்கு நேர்ந்த விபரீதம்... லட்சங்களை இழந்த சோகம்

PF Balance : பிஎஃப் இருப்பை சரிபார்த்த நபருக்கு நேர்ந்த விபரீதம்... லட்சங்களை இழந்த சோகம்

பிஎஃப் இருப்பை சரிபார்த்த நபருக்கு நேர்ந்த விபரீதம்

பிஎஃப் இருப்பை சரிபார்த்த நபருக்கு நேர்ந்த விபரீதம்

EPF Balance | பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் EPFO(EPFO), PF கணக்கு பற்றி நன்றாக தெரிந்து இருப்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்தில் இருந்து சில தொகை PF கணக்கில்( PF account) வரவு வைக்கப்படும். மேலும் நிறுவனம் அதே தொகையை ஊழியரின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். இது ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதனால்தான் பெரும்பாலான மக்கள் PF பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆனால் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். இதை நீங்கள் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  47 வயதான ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார. அவர் PF இருப்பை சரிபார்க்க விரும்பினார் மற்றும் EPFO ​​உதவி எண்ணை கூகுளில் தேடினார். அவருக்கு உதவி எண் கிடைத்தது. ஆனால் அது போலியானது. இது தெரியாமல் போனில் அவர்கள் சொன்னபடியே செய்துவிட்டு ரிமோட் அக்சஸ் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்தார். இதனை பயன்படுத்தி கொண்ட மோசடியாளர்கள் அவரிடம் இருந்து ரூ.1.24 லட்சம் பணத்தை பறித்துள்ளனர்.14 பரிவர்த்தனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

  அறிக்கைகளின்படி, அந்ந EPFO ​​வலைத்தளத்தைத் உள்நுழைய முயன்றுள்ளார். ஆனால் இணையதளத்தில் செல்ல முடியவில்லை. எனவே அவரது உதவிக்காக கூகுளில் உதவி எண்ணை தேடி உள்ளார். கூகுளில் கிடைத்த எண்ணுக்கு அழைத்துள்ளா். அவரது அழைப்பை ஏற்ற மோசடி செய்பவர்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்க முதலில் சில தொகையை மாற்ற சொன்னார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு ஏமாந்து பணத்தை இழந்த பன் போலீசில் புகார் செய்துள்ளார்.

  Also Read : SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கான கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது!

  அதனால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் கூகுளில் உதவி எண்ணை தேட வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால், நேரடியாக EPFO ​​இணையதளத்திற்குச் செல்லவும். அங்குள்ள எண்களை மட்டும் பயன்படுத்தவும். இல்லாவிட்டால் இப்படி ஏமாற வேண்டி வரும். PF இருப்பைச் சரிபார்க்க பல விருப்பங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

  நீங்கள் நேரடியாக EPFO ​​இணையதளத்திற்குச் சென்று UAN மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைந்து இருப்பைச் சரிபார்க்கலாம். இது தவிர மிஸ்டு கால் மூலமாகவும் பேலன்ஸ் சரிபார்க்கும் வசதி உள்ளது. இது தவிர செயலி மூலமாகவும் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம். இதுபோன்று PF இருப்பைச் சரிபார்க்க பல விருப்பங்கள் உள்ளன.

  Published by:Vijay R
  First published:

  Tags: EPF, Epfo, PF AMOUNT