முகப்பு /செய்தி /வணிகம் / ஜனவரியில் 22 புதிய ஷோரூம்களைத் தொடங்கும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்

ஜனவரியில் 22 புதிய ஷோரூம்களைத் தொடங்கும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்

மலபார் கோல்டு & டைமண்ட்

மலபார் கோல்டு & டைமண்ட்

இந்தியாவில் 10 ஷோரூம்களையும், வெளிநாடுகளில் 12 ஷோரூம்களையும் ஜனவரி 2022 இல் திறக்க உள்ளது. ஜனவரி 2022- ல் ரூபாய் 800 கோடி அளவில் முதலீடு. இந்த வருடத்தில் 5000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

  • News18 Tamil
  • 5-MIN READ
  • Last Updated :

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புத்தாண்டில் ஒரு அற்புதமான தொடக்கத்தை துவங்குகிறது. ஜனவரி மாதத்தில் 22 புதிய ஷோரூம்கள் தொடங்கதிட்டமிட்டுள்ளது.

கோழிக்கோடு: மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 2022 ஆம் ஆண்டு உலகளாவிய நமது விரிவாக்கத்திற்கான ஆயத்தமாக உள்ளது. இதன் படி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஜனவரி மாதத்திலேயே 22 புதிய ஷோரூம்களை துவக்க உள்ளது. இதன் மூலமாக உலகிலேயே மிக பிரமாண்டமான தங்க ஆபரண சில்லறை வர்த்தக நிறுவனமாக மாறுவதில் மும்முரமாக செயல்படுகின்றது. ஒரு தங்க ஆபரண சில்லறை வர்த்தக நிறுவனம் ஒரே ஒரு மாதத்தில் இந்த அளவிலான ஷோரூம்களை துவக்குவது இதுவே இந்தியாவில் முதல் முறையாகும்.

22 புதிய ஷோரூம்களில், பத்து இந்தியாவிலும் மற்றவை ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் துவக்கப்படும். தற்போது நமது பிராண்ட் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு பெற்று வருகின்ற நிலையிலேயே, இதற்கு மேலும் வலு சேர்க்க, இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இந்த ஷோரூம்கள் துவக்கப்படும்.

ஜனவரி மாதத்தில் இந்த பிரம்மாண்டமான வர்த்தக விரிவாக்கத்தின் கீழ் எம் ஜி ரோடு பெங்களூரு நகரத்தில் ஜனவரி 8-ல் பிரத்தியேகமான கலை நயமிக்க ஆபரணங்களுக்கான ஆர்டிஸ்ட்ரி கான்செப்ட் ஸ்டோர் (Artistry concept store) துவங்கப்படும். அதைத் தொடர்ந்து ஜனவரி 9 ஆம் தேதி மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஷோரூம் திறப்பு விழா, தெலுங்கானாவில் சித்திபேட் (Siddipet) மற்றும் மைடின் மால் செரெம்பன் மலேசியாவில் (Mydin Mall Seremban Malaysia) ஜனவரி 13 ஆம் தேதி, ஜனவரி 14 ஆம் தேதி தமிழ்நாட்டில் திருப்பூரில் ஷோரூம் திறப்பு விழா, ஜனவரி 20 ஆம் தேதி பினாங் (Penang) மலேசியாவில் திறப்பு விழா, ஜனவரி 21 ஆம் தேதி பெங்களூரில் HSR லேஅவுட், உத்தரபிரதேசத்தில் வாரணாசி-ல் திறப்பு விழா, ஜனவரி 22 ஆம் தேதி கத்தாரில் உள்ள கராஃபாவில் லேண்ட்மார்க் ஷாப்பிங் மால் (Landmark Shopping Mall), அல்-மீரா ஜெரியன் ஜெனைஹாட் (Al-MeeraJeryanJenaihat),, அல்-கௌத் மால் (Al-Khoud Mall) மற்றும் மஸ்கட்டில் உள்ள மால் ஆஃப் ஓமன்-யில் (Mall of Oman) ஷோரூம் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

ஜனவரி 27 அன்று சத்தீஸ்கரில் உள்ள ராய்பூர், ஜனவரி 28 அன்று புனேவின் ஹடாப்சர் (Hadapsar) மகாராஷ்டிராவிலும், ஜனவரி 29 ஆம் தேதி சிட்டி சென்டர் அல்-ஜாஹியா ஷார்ஜா, துபாய் கோல்ட் சூக்கில் மூன்று ஷோரூம்கள், துபாயில் கிரவுன் மால் ஜெபல் அலி, ஷார்ஜாவில் லுலு முவேலா ஹைப்பர் மார்க்கெட் திறப்பு விழா, ஜனவரி 30 அன்று குருகிராம் ஹரியானா மற்றும் டெல்லியில் ப்ரீத் விஹார் (Preet Vihar) ஆகிய இடங்களில் துவக்கப்படும்.

இந்த வருடம் ஜனவரியில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் குழுமம் மொத்தமாக ரூபாய் 800 கோடி அளவில் முதலீடு செய்கின்றது. மலபார் கோல்டு & டைமண்ட் 750 ஷோரூம்களை துவக்கும் நோக்கத்தைக் கொண்டு உலகிலேயே அதிக ஷோரூம்களை கொண்ட தங்க விற்பனை வர்த்தகராக உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தை கொண்டுள்ளது.

இந்த வர்த்தக விரிவாக்கத் திட்டத்தின் கீழாக தங்க நகை வர்த்தகத்தில், சில்லரை வர்த்தகம், உற்பத்தி, தொழில் நுட்பம் மற்றும் நிர்வாக துறைகளில் ஐயாயிரத்துக்கும் (5000) மேலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி அகமது தெரிவித்தார்.

“எங்களது 28 வருட மகத்தான வர்த்தக பயணத்திலே மலபார் கோல்டு & டைமண்ட் மேலும் பலமாக சிறப்பாகவும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது என்பதில் பெருமிதம் கொள்கின்றோம். எங்களது சிறப்பான சேவைகள் மற்றும் தயாரிப்புகள் மூலமாக ஏற்கனவே எங்களது வர்த்தகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பிராந்தியங்களில் மேலும் சில்லறை வர்த்தகத்தை வலுப்படுத்தவும் மற்றும் புதிய சந்தைகளில் நுழையவும் முனைந்து உள்ளோம்.

ஜனவரி மாதத்திலேயே 22 புதிய ஷோரூம்களை துவக்கி அதன் மூலமாக புத்தாண்டில் மிகச்சிறப்பான ஒரு வர்த்தக தாக்கத்தை உருவாக்குவதில் ஆயத்தமாக உள்ளோம். எங்களது அனைத்து புதிய ஷோரூம்கள் எங்களது வெளிப்படைதன்மை, நம்பிக்கை, தரம் மற்றும் சேவை ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பாராட்டுவதோடு உலகத்தரமான ஜுவல்லரி ஷாப்பிங் அனுபவத்தையும் பெறுவார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

‘இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் உலகின் சந்தைக்கு கொண்டு செல்வோம்’ (Make in India and Market to the world) என்பதே எங்களது குறிக்கோள் ஆகும். பன்னாட்டு அளவில் இந்திய தங்க நகைகளுக்கு ஒரு சிறப்பான பிராண்ட் நன்மதிப்பை உருவாக்கி மேலும் உள்நாட்டில் வர்த்தகத் துறையில் பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளோம். இதுவே எங்களது கொள்கையாக உள்ளது என்கிறார்” மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது தெரிவித்தார்.

அப்துல் சலாம் கே பி மலபார் குழுமத்தின் துணைத் தலைவர் அவர்கள் கூறுகையில், “எங்களது வருங்கால வளர்ச்சியை காண்பதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம். ஒரு பக்கத்தில் நாங்கள் பெங்களூரில் துவக்க உள்ளதைப் போல புதிய கலை நயம் கொண்ட தயாரிப்புகளுக்கான பிரத்தியேக ஆர்டிஸ்ட்ரீ ஸ்டோர்கள் மூலமாகவும் மற்றொரு பக்கம் நமது பாரம்பரிய ஷோரூம்கள் ஆகிய இவ்விரண்டையும் நமது இந்தியாவின் பெரிய மற்ற சிறிய நகரங்களிலும் தொடர்ச்சியாக துவங்க உள்ளோம். எங்களது இந்த இரட்டை முனை உத்தி சிறப்பான ஆக்கபூர்வ வளர்ச்சியை எங்களுக்கு தரும் என்று மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளோம்.”

“எங்களது சிறப்பான சேவைகள் மற்றும் தரமான தயாரிப்புகள் மூலமாக ஏற்கனவே நாங்கள் கால் தடம் பதித்துள்ள பிராந்தியங்களில் மேலும் வலு சேர்க்க மற்றும் புதிய சந்தைகளில் தடம் பதிப்பதற்கான உத்தியின ஒரு பகுதியாக இந்த வர்த்தக விரிவாக்கம் அமைகின்றது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற சந்தைகள் வேகமாக வளர்ந்து வருவதை எங்களது சந்தை-புள்ளி விவரங்கள் தெளிவு படுத்துகின்றன. இதனை கருத்தில் கொண்டு இந்த சந்தைகளில் நாங்கள் வாடிக்கையாளர் வசதி மற்றும் திருப்தி அடங்கிய ஒரு புதிய தராதரத்தை உருவாக்க ஆயத்தமாக உள்ளோம்”, என்கிறார் திரு. ஓ அஷேர் நிர்வாக இயக்குனர் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இந்தியா வர்த்தக செயல்பாடுகள்.

“இந்திய தங்க நகை தயாரிப்புகளை சமீப காலத்தில் பன்னாட்டு அளவில் வெகுவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக மற்றும் நம்பக் கூடியதாக மாற்றுவதில் மலபார் வெகு முக்கிய பங்களிப்பை அளித்திருக்கின்றது” என்று சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர்ரின் திரு ஷாம்லால் அஹமத் கூறினார்.

மலபார் கோல்டு & டைமண்ட்

தூய்மை மற்றும் தரத்திற்கு பேர்பெற்ற மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் ரத்தினக் கற்கள் கொண்ட பாரம்பரிய மற்றும் இன்றைய கால கட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகட்டும் வகையிலே சிறப்பான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. நமது பிராண்டு, இந்திய கலாச்சார பாரம்பரிய வடிவமைப்புகள் உள்ளடக்கிய வேலைப்பாடு மிக்க பல வடிவங்களை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகின்றது. எங்களது பிரசித்தி பெற்ற தங்க நகை தயாரிப்புகளில் ‘மைன்’ (Mine)தனித்துவ வடிவங்கள், ‘எத்தினிஸ்’ (Ethnix) கை வேலைப்பாடு மிக்க தயாரிப்புகள், ப்ரீஷியா ஜெம் ஸ்டோன் தயாரிப்புகள், ‘டிவைன்’ தயாரிப்புகள், ஏரா அன்-கட் (Era uncut) தயாரிப்பு, விராஸ் போல்கி (Viraazpolki), குழந்தைகளுக்கான ஸ்டார்லெட் கலெக்ஷன் போன்றவை அடங்கியதாக பல்வேறு வகையான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தங்களுக்கு உற்பத்திகளில் கொள்முதல் செய்யும் தங்கத்தின் தரம் முதற்கொண்டு, விற்பனை செய்யும் தயாரிப்புகள் வரையாக வெவ்வேறு நிலையிலும் உள்ள உண்மை நிலையை வெளிப்படையாக வாடிக்கையாளரிடம் பகிர்ந்து, ஒரு பொறுப்பான தங்க நகை விற்பனையாளராக தனது நிலையை தொடர்ந்து தக்கவைத்து வருகின்றது. குழுமம் அங்கீகரிக்கப்பட்ட மூலாதாரங்களின் மூலமாக மட்டுமே தங்கத்தை கொள்முதல் செய்கின்றது. உலக அளவிலே வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை கொண்டு வெவ்வேறு சந்தைகளில் செயல்படுகின்ற முதல் ஐந்து மேல் மட்ட தங்க தயாரிப்பு விற்பனையாளர்களில் ஒன்றாக மலபார் கோல் & டைமண்ட் செயல்படுகின்றது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இந்தியா முழுவதுமாக “ஒரு இந்தியா ஒரே தங்கம் விலை” என்ற தனது உறுதிப்பாட்டுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விலையை அளிப்பதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான 10 உறுதிமொழிகளை அளிக்கின்றது. "One India One Gold Rate'' (ஒரு இந்தியா ஒரே தங்கம் விலை) என்ற கொள்கை மூலமாக நமது பிராண்ட் ஒரு புதிய பரிமாணத்தை பெற்று மிக பெரிய அளவிலான நன்னம்பிக்கை பெற்று வருகின்றது. வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய பணத்தின் மதிப்பை உறுதி செய்வதுடன், பலவாறான தங்க ஆபரணங்களுக்கான நியாயமான சேதாரம் அடங்கிய தயாரிப்புக்கான மொத்த விலையின் உத்தரவாதத்தையும் அளிக்கின்றது.

வெளிப்படைத்தன்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் 10 வாக்குறுதிகளின் உறுதியானது, கல் எடை, நிகர எடை மற்றும் நகைகளின் கல் கட்டணம் ஆகியவற்றைக் குறிக்கும் வெளிப்படையான அனைத்தையும் விலை சீட்டிலேயே (ப்ரிஸ் டேக்) குறிக்கப்படுகிறது. மேலும் குறித்த தயாரிப்புக்கான வாழ்நாள் முழுவதுமான பராமரிப்பு, பழைய தங்க ஆபரணங்களை விற்கும் போது அதன் தங்கத்தின் பண மதிப்பு அளித்தல், எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது ஜீரோ கழிவு, தங்கத்தின் தூய்மை யான 100% BIS ஹால் மார்க்கிங் சான்றிதழ் மற்றும் வைரங்களுக்கு பன்னாட்டு அளவிலான இருபத்தி எட்டு அம்ச தர IGI மற்றும் GIA சான்றளிக்கப்பட்ட வைரங்கள் உலகளாவிய தரநிலைகளின் 28-புள்ளி தர சோதனையை சான்றிதழ், பை-பேக் உத்தரவாதம், பொறுப்பான கொள்முதல் மற்றும் நியாயமான தொழிலாளர் நடைமுறைகள் அடங்கிய பல அம்சங்களை கொண்டுள்ளது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் பத்து நாடுகளில் சில்லரை வர்த்தகத்தில் சிறப்பாக தனது தடம் பதித்துள்ளது. இதற்கு மேலாக குழுமம் 14 மொத்த விலை மையங்கள் மற்றும் 9 தங்க நகை உற்பத்தி மையங்களை இந்தியா மற்றும் வெளிநாட்டுகளில் கொண்டுள்ளது. நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 4.51 பில்லியன் டாலர் அளவிலாக உள்ளது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 5% லாபத்தை கல்வி, உடல்நலம், பெண்கள் அதிகாரமளிப்பு, ஏழைகளுக்கு வீட்டுவசதி மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகியவை அடங்கிய பல்வேறு சமுதாய நலத் திட்டங்களுக்க்காக ஒதுக்குகின்றது. நிறுவனம், கேரளாவில் கவனிக்கப்படாத மற்றும் அனாதை தாயார்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதன் பொருட்டு, அரசு பொருத்தமான நிலத்தை ஒதுக்க முன்வரின் தேவையான மறுவாழ்வு இல்லங்களை அமைத்து தர நிறுவனம் ஏற்கனவே அரசுக்கு உறுதி அளித்திருக்கின்றது.

First published: