Home /News /business /

பேமென்ட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் முன் இதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. SBI அறிவுறுத்தல்

பேமென்ட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் முன் இதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. SBI அறிவுறுத்தல்

பேமென்ட்ஸ் ஆப்ஸ்

பேமென்ட்ஸ் ஆப்ஸ்

பலரும் கையில் பணம் வைத்து கொண்டு பர்ச்சேஸ் செய்யாமல், பர்ச்சேஸிற்கு பிறகு ஆப்ஸை பயன்படுத்தி கடைகளுக்கு பணம் செலுத்துகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
சிறு கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை இப்போது எங்கு சென்றாலும் பலர் வாடிக்கையாளர்கள் கையில் பணம் கொண்டு செல்வதில்லை. தங்கள் ஸ்மார்ட் போன்களில் பல பேமென்ட்ஸ் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து வைத்துள்ள மக்கள், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு ஆன்லைன் மூலம் யுபிஐ ஐடி-யை பயன்படுத்தி பணம் செலுத்தி விடுகின்றனர்.

முக்கியமாக கொரோனா தொற்றுக்கு பிறகு ஆன்லைன் பரிவர்த்தனைகள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து உள்ளன. சில எளிய வழிமுறைகள் மூலம் எளிதாக பணம் செலுத்தி விட முடிவதால் பலரும் கையில் பணம் வைத்து கொண்டு பர்ச்சேஸ் செய்யாமல், பர்ச்சேஸிற்கு பிறகு ஆப்ஸை பயன்படுத்தி கடைகளுக்கு பணம் செலுத்துகின்றனர். இதற்காக மக்களால் Google Pay, Paytm, PhonePe உள்ளிட்ட பிரபலமான ஆப்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதே நோக்கத்திற்காக ஆன்லைன் பேங்கிங் ஆப்ஸ்களையும் பயன்படுத்தலாம். கடைகளுக்கு பணம் செலுத்துவது முதல் , ரீசார்ஜ் செய்வது வரை அனைத்தும் ஆன்லனில் செய்யப்படுவதால் டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்துள்ளன. . இதை கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பண பரிமாற்றங்களை செய்யும்போது UPI ஐடி-யை அதிகாரபூர்வமானதா என்று செக் செய்து கொள்ளும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சமீபத்தில் தனது ட்விட்டரில் SBI " பரிவர்த்தனை செய்யும் போது UPI ஐடி-யை செக் செய்ய நினைவில் கொள்ளுங்கள், அது அதிகாரப்பூர்வமானது என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.

ஆன்லைன் பேமென்ட்டின் போது பண இழப்பை தடுக்கும் உதவும் டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..

* UPI PIN நம்பர் என்பது பணத்தை நீங்கள் மாற்றுவதற்கு மட்டுமே தேவைப்படும். ஒருவரிடமிருந்து பணத்தை நாம் பெறுவதற்கு அவருக்கு நம்முடைய UPI பின் தெரிய வேண்டியதில்லை. உங்கள் UPI PIN-ஐ யாராவது கேட்டால் உஷாராக இருங்கள்.

* ஒருவருக்கு பணம் அனுப்பும் முன் அவரது மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை எப்போதும் சரி பார்க்கவும்.

* உங்களது UPI PIN உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்க வேண்டும். வேறு யாரிடமும் ஷேர் செய்ய கூடாது.

* பண பரிமாற்றத்திற்கு QR code ஸ்கேனரை பயன்படுத்துவது சிறந்தது.

* சிக்கல் என்றால் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைகளை தவிர பிறரிடம் தீர்வு தேட வேண்டாம்.

Also read... EPFO : உங்கள் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் கிடைக்க இதை செய்தாலே போதும்!

* பணம் செலுத்தும் போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கலுக்கு நீங்கள் பயன்படுத்தும் பேமென்ட் ஆப்ஸின் உதவி பிரிவைப் பயன்படுத்தவும். முரண்பாடுகள் இருப்பின் உங்கள் வங்கியின் புகார்த் தீர்வு போர்டல் (Complaint Resolution portal) மூலம் தீர்வு காணுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: SBI

அடுத்த செய்தி