ரூ.50,000க்கு மேல் காசோலை செலுத்த ரிசர்வ் வங்கி புதிய விதிகள் அறிமுகம்

ரூ.50,000க்கு மேல் காசோலை செலுத்த புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.50,000க்கு மேல் காசோலை செலுத்த ரிசர்வ் வங்கி புதிய விதிகள் அறிமுகம்
ரிசர்வ் வங்கி
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 10:45 PM IST
  • Share this:
ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் காசோலையை செலுத்துவதற்கு ஜனவரி 1, 2021 முதல் 'பாசிட்டிவ் பே சிஸ்டம்' என்ற முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

1. பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம் ரூ.50,000க்கு மேல் உள்ள பேமெண்ட்களுக்கு முக்கிய விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியிருக்கும். கணக்கு வைத்திருப்பவரின் விருப்பப்படி இதை செய்ய வேண்டும்.


2. ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்துவோருக்கு இந்த முறையை வங்கிகள் கட்டாயமாக்கக்கூடும்.

3. காசோலை வழங்குபவர், பாசிட்டிவ் பே சிஸ்டத்தின் கீழ் தம் குறைந்தபட்ச விவரங்களான தேதி, பயனாளியின் பெயர், பணம் செலுத்துபவர் விவரம் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் SMS, மொபைல், இணைய சேவை அல்லது ஏடிஎம் மூலம் வழங்கவேண்டும்.

4. இந்த விவரங்கள் அனைத்தும் காசோலையைச் செலுத்தி பணம் பெறும் முன்னர் சரிபார்க்கப்படும்.5. சி.டி.எஸ் (cheque truncation system) மூலம் பயனர் தங்கள் வங்கியை அணுகினால் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Also read: கணினி அறிவியல் படிக்க இருக்கிறேன் - பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி6. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.சி.ஐ) சி.டி.எஸ்ஸில் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி வங்கிகளுக்கு அதைக் கிடைக்கச் செய்யும். ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தும்.

7. எஸ்.எம்.எஸ், வங்கிகளில் விளம்பரம் செய்தல் போன்றவை வழியாக இந்த முறை குறித்து வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

8. பாசிட்டிவ் பே சிஸ்டத்தில் எழும் புகாரை சி.டி.எஸ் க்ரிட் மூலம் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9. இருப்பினும், சி.டி.எஸ்-க்கு வெளியே தீர்க்கப்பட்ட மற்றும் சேகரிக்கப்பட்ட காசோலைகளுக்கு இதே போன்ற ஏற்பாடுகளை செயல்படுத்த வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading