முகப்பு /செய்தி /வணிகம் / ஐ.டி. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொன்ன சூப்பர் அறிவிப்பு

ஐ.டி. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொன்ன சூப்பர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள முயலும் முக்கிய நிறுவனங்கள் சம்பள உயர்வு போன்ற சலுகைகளை அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விப்ரோ, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் சம்பள உயர்வு மற்றும் ஊழியர்களைத் தக்கவைக்க போனஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. விப்ரோ ஊழியர்களுக்கான சம்பள உயர்வு செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும் என்று நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த காலாண்டின் இறுதியிலிருந்தே இந்தியாவில் இயங்கி வரும் பல தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்களை வேலை விட்டு நீக்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் முக்கிய நிறுவனங்கள் இப்படியோர் அறிவிப்பை அளித்துள்ளனர்.

சம்பள உயர்வு, போனஸ் மற்றும் பிற சலுகைகள் மூலம் ஊழியர்களைத் தக்கவைக்க நிறுவனங்கள் எவ்வாறு திட்டமிட்டுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

விப்ரோ:

விப்ரோ நிறுவனம் சம்பள உயர்வு விவகாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம்பள உயர்வு குறித்த முந்தைய அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை, மேலும் எங்கள் ஊழியர்களுக்கான உயர்வுகள் செப்டம்பர் 1, 2022 முதல் அமலுக்கு வரும். ஜூலை 1, 2022 முதல் காலாண்டு முன்னேற்றங்களின் முதல் சுழற்சியை நாங்கள் முடித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும்  ஊதியம் காரணமாக மார்ஜின் அழுத்தம் இருப்பது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ்:

அட்ரிஷன் விகிதம் அதிகமாக இருந்தாலும், ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் சம்பளத்தை உயர்த்தவும், புதிய ஊழியர்களை பணியமர்த்துவதை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. முந்தைய காலாண்டில் 27.7 சதவீதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் 2022 காலாண்டில் 28.4 சதவீதமாக உயர்ந்துள்ள சரிவு விகிதத்தை இது குறைக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

Also Read : தங்கத்தில் முதலீடு செய்யனும்னு ஐடியா இருக்கா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க

இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய், அதன் Q1 முடிவுகளை அறிவித்த போது, "போட்டி இழப்பீடுகளைச் சரி செய்யும் விதமாக மூலோபாய முதலீடுகள் மூலம் திறமையானவர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். இது உடனடியாக தேய்வு அளவை குறைப்பதோடு, எதிர்கால வளர்ச்சிக்கும் உதவும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

டிசிஎஸ்:

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 19.7 சதவிகிதம் அதிக அட்ரிஷன் விகிதத்தைப் பதிவு செய்ததை அடுத்து, அதன் ஊழியர்களுக்கு 5-8 சதவிகித சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்துள்ளது.

டிசிஎஸ் ஊழியர்களுக்கு 8 சதவீதம் வரை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை மனிதவள அலுவலகம் மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார். “எங்கள் வருடாந்திர இழப்பீடு மதிப்பீட்டைத் தொடர்ந்து, ஊழியர்கள் 5 முதல் 8 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. செயல்திறன் சார்ந்த பணி கலாச்சாரம், எங்களின் அனைத்து முக்கிய சந்தைகளிலும் உள்ளூர் திறமையாளர்களை ஈர்த்து வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனமும் புதிய ஊழியர்களை பணியமர்த்த ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Infosys, Salary hike, TCS, Wipro