நீங்கள் உங்களின் பேங்க் அக்கவுண்ட்டில் எப்போதுமே குறைவான பேலன்ஸ் வைத்து கொள்வீர்களா? அப்படி என்றால், லட்சம் ரூபாய் மதிப்புள்ள சில சலுகைகளை நீங்கள் இழக்க நேரிடும். ஆம், நீங்கள் படித்தது சரிதான். வங்கிக் கணக்கில் போதுமான தொகையை பராமரிக்காததால், உங்கள் கணக்கில் உள்ள நிதியில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பிரீமியத்திற்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காமல் அதை இழக்க நேரிடும். மத்திய அரசின் இரண்டு திட்டங்களான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் காப்பீடுகள் விரைவில் புதுப்பிக்கப்படும்.
அதனால்தான், வங்கிக் கணக்கில் போதுமான பணத்தை பராமரிப்பது அவசியம் என்று சொல்கின்றனர். இதன் மூலம் நீங்கள் தொடர்ந்து இந்த வகையான சலுகைகளை அனுபவிக்க முடியும். PMJJBY திட்டம் மற்றும் PMSBY திட்டங்களின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுக் கொள்கைகளைப் புதுப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 31, 2022 ஆகும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் பயனாளிகள் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுப் சலுகைகளை பெற முடியும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 18 முதல் 50 வயதுடைய இந்தியர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். அதன்படி பாலிசிதாரர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. தகுதியான நபர் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து தங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்திற்குச் சென்று PMJJBY பாலிசியை பெறலாம். பாலிசிதாரர்களின் கணக்கில் பிரீமியம் தொகை தானாக டெபிட் செய்யப்படுகிறது.
Also Read : இதென்ன பகல் கொள்ளையா இருக்கு.? ஏடிஎம் பரிவர்த்தனைக்காக ரூ.645 கோடி வசூலித்துள்ள வங்கி!
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்பது விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும், இதன் கீழ் பாலிசிதாரர் விபத்தில் இறந்தால் மட்டுமே அவர் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு (நாமினிகளுக்கு) நிதித் தொகை வழங்கப்படும். 18 முதல் 70 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் இந்த பாலிசியை வாங்கலாம். இத்திட்டமானது விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும், விபத்தினால் பாதி உடல் பாகங்கள் செயலற்று போனால் ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு பிரீமியமாக ரூ.12 லட்சம் உள்ளது.
இந்தியக் குடிமக்கள் குறைந்தபட்சம் PMJJBY திட்டத்திற்கு ரூ. 330 மற்றும் PMSBY திட்டத்திற்கு ரூ. 12 சேர்த்து மொத்தமாக ரூ. 342 என இரண்டு இன்சூரன்ஸ் பாலிசிகளின் கீழ் தொடர்ந்து காப்பீடு செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த பாலிசி பற்றி இதுவரை அறியாதவர்கள் இனி அறிந்து கொண்டு அவசியம் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.