Home /News /business /

பெண் தொழில் முனைவோர்களுக்கு புதிய money ப்ரீபெயிட் கார்டு வசதி!

பெண் தொழில் முனைவோர்களுக்கு புதிய money ப்ரீபெயிட் கார்டு வசதி!

ஐசிஐசிஐ பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

தங்களின் தொழில் செலவுகளுக்காக டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய விரும்பும் பெண்களுக்கு இது அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆண்களுக்கு நிகராக இன்று பெண்களும் எல்லா துறைகளில் முன்னேறி வருகின்றனர். தனக்கென்று ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பல பெண்கள் கடுமையாக உழைத்து தங்களது லட்சிய கனவை அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய ஸ்டார்ட் அப் உலகில் பெண்கள் தொழில் முனைவோராகவும் சாதிக்க விரும்புகின்றனர்.

    இதனால் ஏராளமான பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. இவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது. இதன் மூலம் பெண்கள் தங்களின் தொழிலை பல மடங்கு பெருக்க முடியும்.

    மில்லியன்கணக்கான பெண் தொழில்முனைவோருக்கு பொருளாதார சுதந்திரம் மற்றும் நிதி சேர்க்கைக்கு வழி வகுக்கும் வகையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தங்கள் வங்கிக் கணக்குகளை இயக்கத்தில் வைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு இந்த ப்ரீபெயிட் கார்டு மிகவும் பயன்படும். மஹிலா மணி, விசா மற்றும் டிரான்ஸ்கார்ப் ஆகியவை இந்த சிறப்பு ப்ரீபெய்ட் கார்டை - வழங்க ஒன்று சேர்ந்துள்ளன.

    பெண் தொழில்முனைவோருக்கு பணம் செலுத்துதல், கடன்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.பெண் தொழில் முனைவோர் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மிகவும் திறம்பட பயன்படுத்தவும் இந்த ப்ரீபெய்ட் கார்டு உதவும் என்று மஹிலா மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. "பெண்கள் தங்களது தொழிலில் வெற்றிபெற உதவுவதற்கும், அவர்களின் நிதி மற்றும் சமூக மூலதனத்தை உருவாக்குவதற்கு உறுதியளிக்கப்பட்ட ஒரு அமைப்பாக, மஹிலா மனி ப்ரீபெய்ட் கார்டு அமையும்" என்று மஹிலா மனி நிறுவனர் சாய்ரி சாஹல் இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    பெரும்பாலான குடும்பங்களில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் அளவு முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், 55 சதவீத பெண்கள் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதில்லை என்று அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வில் (AIIDS) குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த பிரீபெயிட் கார்டானது பெண் தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது மற்றும் கடன்களை நேரடியாக கார்டுக்கு மாற்ற முடியும் என்பதால், அவர்களின் முதலீட்டை அதிகரிக்கவும் உதவுகிறது. ஊக்கத்தொகைகள், வெகுமதிகள் மற்றும் கேஷ்பேக் ஆகியவை இதில் வழங்கப்படும்.

    குறிப்பாக தங்களின் தொழில் செலவுகளுக்காக டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய விரும்பும் பெண்களுக்கு இது அதிகம் பயனுள்ளதாக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் கார்ட் என்பது முழு டிஜிட்டல் முறையை கொண்டது. எனவே இது தொந்தரவு இல்லாதது, பாதுகாப்பானது மற்றும் பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கவும் செய்கிறது. இந்த டிஜிட்டல் கார்டுடன் அதன் நகலையும் நீங்கள் பெறலாம். எனவே பெண் தொழில் முனைவோருக்கு பல வகையில் இந்த கார்டு உதவியாக இருக்கும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Credit Card, Entrepreneurship

    அடுத்த செய்தி